அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆராய்ச்சித் திட்டமிடல், சமூகத் தேவைகள் மற்றும் திறந்த அறிவியல் பற்றிய சர்வதேசப் பயிலரங்கு

Posted On: 10 DEC 2022 6:10PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதிலும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதிலும் சிஎஸ்ஐஆர் - ன் அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பரிசோதனைக் கூடத்தின் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகள்  சமீபத்திய அதிநவீன துறைகளில் பணியாற்றுகின்றன. சைன்டோமெட்ரிக் எனும் அளவை மற்றும் பகுப்பாய்வு பிரிவு இந்நிறுவனத்தின் வலிமையான பகுதிகளில்  ஒன்றாகும். இது இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கொள்கை உருவாக்கத் தரவுகளில் கவனம் செலுத்தும் பகுதியாக உள்ளது. ஆராய்ச்சித் திட்டமிடல், சமூகத் தேவைகள் மற்றும் திறந்த அறிவியல் பற்றிய சர்வதேசப் பயிலரங்கில் வரவேற்புரையாற்றிய சிஎஸ்ஐஆர் - ன் அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவன இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் தெரிவித்தார்.

இந்தப் பயிலரங்கில் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழக யுனெஸ்கோ தலைவர்டாக்டர். இஸ்மாயில் ரஃபோல்ஸ் சிறப்புரையாற்றினார்.

பிப்லியோமெட்ரிக்ஸ், சைன்டோமெட்ரிக்ஸ், இன்போமெட்ரிக்ஸ் ஆகிய மூன்று அறிவுப் பெருங்கடல்களை ஒரே இடத்தில் சேர்த்து இருப்பது இந்தப் பயிலரங்கு  என உயிரி தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர். சஞ்சய் குமார் மிஸ்ரா நோக்கவுரையாற்றுகையில் கூறினார்.

******

SRI / SMB / DL



(Release ID: 1882376) Visitor Counter : 147


Read this release in: English , Urdu , Hindi , Telugu