ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இந்தியாவின் இளைஞர்களுக்கு குறிப்பாக ஊரகப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான தேவை அடிப்படையிலான திறன் வடிவமைப்பு தேவை - மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வலியுறுத்தல்
Posted On:
10 DEC 2022 5:12PM by PIB Chennai
இந்தியாவின் இளைஞர்களுக்கு குறிப்பாக ஊரகப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான தேவை அடிப்படையிலான திறன் வடிவமைப்பு அவசியம் என மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கூறியுள்ளார். பயிற்சியின் தரம் முக்கியமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மின்னணு, கல்வி, பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், பிபிஓ, சுற்றுலா, விருந்தோம்பல் ஆகிய துறைகளுடன் எவ்வாறு சிறந்த முறையில் ஒருங்கிணைக்க முடியும் என்பதை ஆராயுமாறு அவர் வலியுறுத்தினார்.
பெங்களூரு கும்பலகோடுவில் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய வளாகத்தை இன்று திறந்து வைத்து அமைச்சர் பேசினார்.
கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய இணையமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே, டாக்டர் சி என் அஸ்வத் நாராயண் மற்றும் கர்நாடக மாநில அமைச்சர் திரு எஸ் டி சோமசேகரா, டாக்டர். வீரேந்திர ஹெக்கடே, எம்.பி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தியாவை ஒரு பெரிய மனித வள மையமாக உருவாக்குவதில் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன. இந்த நிறுவனங்கள் 44 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளன. அவர்களில் கிட்டத்தட்ட 31 லட்சம் பேர் இதுவரை பணியில் சேர்ந்துள்ளனர். பயிற்சி பெற்றவர்களில் , சுமார் 29 லட்சம் பேர் பெண்கள் (66% க்கும் அதிகமானவர்கள்) என்று அமைச்சர் கூறினார்.
******
SRI / PKV / DL
(Release ID: 1882371)
Visitor Counter : 191