மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

குறைமின்கடத்தி சிப்-கள் தயாரிப்பு

Posted On: 09 DEC 2022 1:51PM by PIB Chennai

உலகளாவிய செமிகண்டக்டர்  வினியோகச் சங்கிலியில் இந்தியாவை முக்கியப் பங்குதாரர் நாடாக மாற்ற வேண்டும் என்றும் உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பகத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செமிகான் இந்தியா மாநாடு திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.  குறைமின்கடத்திகளை அதிகமாக பயன்படுத்தும் நாடுகள் வழங்கும் ஊக்கத்தொகைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதன் அடிப்படையில் குறைமின்கடத்திகளை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வது, உற்பத்தி மற்றும் வடிவமைப்பு செயல்பாடுகளில் உதவி செய்வது போன்றவைகள் செய்துத்தரப்படும்.

குறைமின்கடத்தி துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

 இதுசம்பந்தமாக புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கி பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

செமிகான் இந்தியா மாநாடு திட்டத்தின் எதிர்கால வடிவமைப்பின் கீழ் குறைமின்கடத்தி மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும்  ஊக்கத்தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும்.  மேலும் 5 வருட காலங்களில் மொத்த விற்பனை 6 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.30 கோடி வழங்கப்படும். மொஹாலியில் குறைமின்கடத்திக் கூடத்தை நவீனமயமாக்குதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.

**************

AP/GS/AG/IDS

 

 



(Release ID: 1882155) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Marathi