பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கடந்த 2019 – 20 முதல் 2021 -22 வரை மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் 13,122 பேரை பணியமர்த்த மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 DEC 2022 2:55PM by PIB Chennai
கடந்த 2019 – 20 முதல் 2021 -22 வரை மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் 13,122 பேரை பணியமர்த்த மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்மாக பதில் அளித்தார் டாக்டர் ஜிதேந்திர சிங். செலவினத்துறையின் ஆண்டறிக்கையின்படி, 01.03.2021ன் படி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் காலிப்பணியிடங்கள், குரூப்-ஏ 23584, குரூப்- பி 118807, குரூப்-சி 836936 என்று குறிப்பிடப்பட்டிருந்தாக கூறினார்.
6-வது மத்திய ஊதியக்குழு ஆணைய அறிக்கையின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, குரூப்-டி நிலையிலான பணிகள் குரூப்-சியுடன் இணைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
**************
AP/IR/RS/IDS
(रिलीज़ आईडी: 1881919)
आगंतुक पटल : 130