பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 5 வருடங்களில் மத்திய குடிமைப் பணித் தேர்வாணையம் (UPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் மொத்தம் 2,46,914 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2022 2:56PM by PIB Chennai

கடந்த 5 வருடங்களில் மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் (UPSC)   மற்றும் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் மொத்தம் 2,46,914 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.  

மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், ஆண்டுதோறும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தேவைக்கேற்ப, காலிப் பணியிடங்கள் குறித்து, விளம்பரம் செய்யப்படுவதாக கூறினார். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஏற்கனவே அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

**************

AP/IR/RS/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1881908) வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi