அணுசக்தி அமைச்சகம்
இந்திய அணுசக்திக்கழகம் இதுவரை அதன் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்காக சுமார் ரூ. 663 கோடி செலவிட்டுள்ளது என்றும் இதில் சுமார் 70% அணு மின் நிலையங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
08 DEC 2022 1:56PM by PIB Chennai
கூடங்குளம் பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான சிறப்பு சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டம் (என்டிபி) ரூ. 500 கோடியில் அமலாக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ. 200 கோடி மற்றும் வீடுகள் கட்ட ரூ. 300 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு), புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்திய அணுசக்தி கழகம் இதுவரை அதன் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்காக சுமார் ரூ. 663 கோடி செலவிட்டுள்ளது என்றும் இதில் சுமார் 70% , அணு மின் நிலையங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
*****
AP/SMB/IDS
(Release ID: 1881900)