அணுசக்தி அமைச்சகம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1000 மெகா வாட் திறனுடைய 4 அலகுகளின் கட்டுமானம் 2027 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 DEC 2022 1:54PM by PIB Chennai
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1000 மெகா வாட் திறனுடைய 4 அலகுகளின் கட்டுமானம் 2027 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகா வாட் திறனுடைய ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலகுகளில் உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். தற்போதைய பணிகள் நிறைவடையும் போது, 2027-ஆம் ஆண்டுக்குள் 6000 மெகா வாட் முழு உற்பத்தி திறனை கூடங்குளம் அணுமின் நிலையம் அடையும் என்று அவர் கூறியுள்ளார்.
இத்தகவலை மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
**************
AP/IR/RS/IDS
(रिलीज़ आईडी: 1881829)
आगंतुक पटल : 478