வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அம்ருத் இயக்கத்தின் நிலவரம்

Posted On: 08 DEC 2022 2:40PM by PIB Chennai

அம்ருத் எனப்படும் அடல் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்ற  இயக்கம் 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி  நாடு முழுவதும் குறிப்பிட்ட 500 பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தொடங்கப்பட்டது. இந்த தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், குடிநீர் விநியோகம், கழிவு நீர் அகற்றல், கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால், பசுமை வெளிகள், பூங்காக்கள், மோட்டார் அல்லாத நகர்ப்புறப் போக்குவரத்து ஆகிய அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் நகர்ப்புற சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாநில ஆண்டு செயல்திட்டங்களை செயல்படுத்த ரூ.77,640 கோடிக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் நிதியுதவி, ரூ.35,990 கோடியாகும்.

இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ரூ.82,222 கோடி மதிப்பிலான 5,823 திட்டங்களை எடுத்துள்ளன. இதில், ரூ.32,793 கோடி மதிப்பிலான 4,676 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ரூ.49,430 கோடி மதிப்பிலான 1,197 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

ரூ.35,990 கோடி மத்திய நிதியுதவியில், ரூ.31,198 கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது.  அம்ருத் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக ரூ.37,533 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 134 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள், 102 லட்சம் கழிவு நீர் இணைப்புகள், அம்ருத் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில், இத்தகவலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் திரு கவுஷல் கிஷோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

**************

AP/PKV/KPG/IDS

 


(Release ID: 1881823) Visitor Counter : 364


Read this release in: English , Urdu , Marathi