வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
08 DEC 2022 2:43PM by PIB Chennai
நிலம் மற்றும் குடியிருப்பு ஆகியவை மாநில விவகாரங்களாகும். பல்வேறு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்கள் உட்பட நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், அனைவருக்கும் வீட்டுவசதி என்னும் தொலைநோக்குடன் மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் வீட்டுவசதி முயற்சிகளுக்கு பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் (நகர்ப்புறம்), கீழ், மத்திய நிதியை, குடிசைவாசிகள் உட்பட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கி வருகிறது. இந்த திட்டம் நான்கு முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 28.11.2022 நிலவரப்படி, 1.20 கோடி வீடுகள் தகுதி உள்ள நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான மத்திய அரசின் உதவி ரூ.2.03 லட்சம் கோடியாகும்.
இதில், 64 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ளன.
மக்களவையில், இத்தகவலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் திரு கவுசல் கிஷோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
**************
AP/PKV/KPG/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1881820)
வருகையாளர் எண்ணிக்கை : 178