சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
காரில் தொகுப்புப் பயணம் மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள்
Posted On:
08 DEC 2022 12:54PM by PIB Chennai
மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 93க்கு ஏற்ப, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் இணக்கத்திற்காக, 2020 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2020 நவம்பர் 27 அன்று வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் உரிமம் வழங்குதல் மற்றும் அத்தகைய ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படும் செயல்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டும் கட்டமைப்பை அளிக்கின்றன. இந்த வழிகாட்டுதல்களின் பத்தி 11 இன் படி ரைடு பூலிங் தொடர்பான வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து என்பது மாநில விஷயமாகும். எனவே, சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட, நிலையான நகர்ப்புற போக்குவரத்து அமைப்பின் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான முயற்சிகள் அந்தந்த நகரங்கள்/மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும், தூய்மையான பயணத்தைத் தேர்வு செய்யவும் - வேலைக்குச் செல்லும்போது பயணத்தைப் பகிரவும் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் அல்லது நடந்து செல்லவும் அல்லது சைக்கிளைப் பயன்படுத்தவும், குறும்பயணங்களை ஒருங்கிணைக்கவும், பயணங்களைக் குறைக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய தூய்மைக் காற்று திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
**************
AP/SMB/IDS
(Release ID: 1881804)
Visitor Counter : 179