சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகளின் பாதுகாப்பு
Posted On:
08 DEC 2022 12:51PM by PIB Chennai
இந்திய சாலைகள், காங்கிரசின் சட்டங்கள், அமைச்சகத்தின் விதிமுறைகள், உரிய சர்வதேச சட்டங்கள் மற்றும் தொழில்முறை நடைமுறைகள், ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சகம், சாலைப்பாதுகாப்புக்கு குறிப்பாக, பாதசாரிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. சாலைகளில் நடைபாதைகளை உயர்த்துதல், பாதசாரிகளுக்கு பாதுகாப்பான தடுப்புகள் அமைத்தல், சாலைகளில் நடுப்பாதை பிரிப்பான்கள் ஆகியவை விதிமுறைகளின்படி அமைக்கப்படுகின்றன. இவை தவிர, பாதசாரிகள் பாதுகாப்பு உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சுற்றறிக்கைகளையும் அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நடைபாதை பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவை நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் ஒருபகுதியாக அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 3 நடைமேம்பாலங்களை அமைக்க ரூ.5.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
**************
PKV/KPG/IDS
(Release ID: 1881729)