சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாலை மேம்பாலங்கள் கட்டுமானம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2022 12:49PM by PIB Chennai

2021-22-ஆம் நிதியாண்டில் மகாரஷ்ட்ரா மாநிலம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், தேசிய நெடுஞ்சாலைகள் மீது சாலை மேம்பாலங்களை கட்டுவதற்கான ரூ.46,960.52 கோடி மதிப்பிலான மொத்தம் 80 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மொத்தம் 80 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதில், ரூ.21,288.98 கோடி மதிப்பிலான 24 திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது. எஞ்சிய 56 திட்டங்கள் ஒப்பந்தப்புள்ளி ஏலம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ளன.

மக்களவையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

**************

 

PKV/KPG/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1881714) வருகையாளர் எண்ணிக்கை : 178
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Bengali