சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் நிதிக்கொள்கை அறிக்கையை வெளியிட்டார் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்


ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாக அதிகரித்தது ஆர்பிஐ
இந்தியப் பொருளாதாரம் 2022-23-ல் 6.8 சதவீத வளர்ச்சி அடையும் : ஆர்பிஐ கணிப்பு

Posted On: 07 DEC 2022 2:57PM by PIB Chennai

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 காசுகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6 சதவீதமாக இருக்கும். வங்கிகளுக்கிடையிலான தினசரி வணிகத்தின் போது, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரிசெய்வதற்காக அறிமுகப் படுத்தப்பட்ட மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிட்டி எனப்படும் எம்எஸ்எஃப் விகிதம் 6.50 சதவீதமாக இருக்கும்.

பணவீக்க விகிதத்தை ஓர் இலக்குக்குள் வைத்து வளர்ச்சியை ஊக்குவிக்க நிதிக்கொள்கைக்குழு இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக ஆர்பிஐ-ன் யூடியூப் சேனலில் ஆளுநர் டாக்டர் சக்திகாந்த தாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 6.8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த மாற்றங்களுக்கு பின்னர்  இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சி அடையும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக நீடிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால் இந்திய ரூபாய் உள்பட அனைத்து பெரிய நாடுகளின் நாணயங்களும் சரிவை சந்தித்ததாக அவர் கூறினார். இருப்பினும் இந்திய ரூபாய் மற்ற நாணயங்களை விட நிலைத்தன்மையுடன் இருப்பதாக அவர் கூறினார்.

**************

AP/PKV/AG/IDS


(Release ID: 1881485) Visitor Counter : 203


Read this release in: English , Urdu , Hindi , Marathi