குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
வால்மார்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய சிறுதொழில் கழகம் கையெழுத்து
Posted On:
07 DEC 2022 1:09PM by PIB Chennai
தேசிய சிறுதொழில் கழகத்திற்கும் (என்எஸ்ஐசி) வால்மார்ட் குளோபல் சோர்சிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 6-ந் தேதி கையெழுத்தானது. என்எஸ்ஐசி-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு கௌரங் தீட்சித், வால்மார்ட் இயக்குனர் திருமிகு பிரமீளா மல்லையா ஆகியோர் மத்திய குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் என்எஸ்ஐசி தனது திட்டங்கள் மற்றும் சேவைகளை, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்கும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கமுடியும். மேலும் எம்எஸ்எம்இக்கள் தொழில் நடுத்த தேவையான மூலதன நிதி, மொத்தக் கொள்முதல் ஆதரவு ஆகியவற்றையும் பெற முடியும். 2030-ம் ஆண்டு வாக்கில் எம்எஸ்எம்இக்கள் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும்.
வால்மார்ட்டில் வளர்ச்சித் திட்டம் பெருமளவிலான இந்திய எம்எஸ்எம்இக்களை விரிவுபடுத்த உதவும். அதன் மூலம் உற்பத்தி பெருகும், வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் திரு நாராயண் ரானே கூறினார். இந்திய எம்எஸ்எம்இ துறையில், 6.3 கோடி எம்எஸ்எம்இக்கள் தற்போது உள்ளன. இவற்றில் 11 கோடிக்கும் அதிகமானோர் வேலைசெய்கின்றனர். நாட்டில் எம்எஸ்எம்இ துறை மேலும் வளர்ச்சி அடைய வால்மார்ட் ஆதரவு தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
**************
AP/PKV/AG/IDS
(Release ID: 1881454)