தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் செயல்படும் தபால் நிலையங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2022 2:04PM by PIB Chennai

நாட்டில் மொத்தம்  1,59,225 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 11,864 தபால் நிலையங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படுகின்றன.

நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் 37 தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளd. அஞ்சல் துறையில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 4,00,909.  இதில் 2,37,978 கிராம தபால் சேவகர்களும் அடங்குவர்.

தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் தபால் துறைக்கு சொந்தமான நிலத்தை பொது - தனியார் (பிபிபி) ஒத்துழைப்பின் கீழ் பயன்படுத்த எந்தத் திட்டம் முன்மொழியப்படவில்லை.

மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. தேவுசின் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

**************

 

AP/SRI/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1881414) வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Malayalam