அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பெண்கள் பயனாளிகளாக இல்லாமல் பங்கேற்பாளராக மாறி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இருப்பதாக பிரதமர் திரு மோடி கூறியதை மேற்கோள் காட்டிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
06 DEC 2022 5:35PM by PIB Chennai
பெண்கள் பயனாளிகளாக இல்லாமல் பங்கேற்பாளராக மாறி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இருப்பதாக பிரதமர் திரு மோடி கூறியதை மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மேற்கோள் காட்டினார். பெண்கள் தலைமையில் சுகாதாரம் மற்றும் அறிவியல் துறை என்ற மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய அமைச்சர், “புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெண்கள் சக்தியின் வலிமையை அனைவரும் உணரும் நிலை ஏற்பட வேண்டும். பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் அனைத்தும் பெண்கள் தலைமையில் இயங்கும் வகையில் மாற்றம் கண்டுவருகிறது” என்றார்.
“நமது பிரதமர் சமீபத்தில் நாட்டில் உள்ள பெண்களில் 50 சதவீதம் பேர் வீடுகளில் அடைபட்டுக் கொண்டிருந்தால், இந்தியா முன்னேற்றம் காணாது என்று கூறினார். தற்போது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் மகளிர் சக்தியின் மகிமை குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, நிதி ஆதாரங்கள் முதல் சமூகப் பாதுகாப்பு வரை, தரமான சுகாதாரம் முதல் வீட்டு வசதி வரை, கல்வி வாய்ப்பு முதல் தொழில்முனையும் ஆற்றல் வரை பெண்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர் என்றார். வரும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்” என்றார்.
அறிவியல் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி அறிவியல், ட்ரோன் மற்றும் நானோ தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெண் விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் சிறந்து விளங்குகின்றன. பயனாளிகள் நேரடியாகப் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றம் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவி கவுன்சில் ஆகியவை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பேசுகையில், “பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டு ஆண்களுக்கு சமமான நிலையில் பெண்களை வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு சுய அந்தஸ்து, கொள்கை முடிவு எடுக்கும் போது சம வாய்ப்பு அளிப்பது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திறன் போன்றவைகள் பெண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்கும் போது சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
**************
AP/GS/KPG/IDS
(Release ID: 1881230)
Visitor Counter : 180