விவசாயத்துறை அமைச்சகம்
மூங்கில் துறையின் மேம்பாட்டிற்கு ஆலோசனைக் குழு அமைப்பு
Posted On:
05 DEC 2022 8:20PM by PIB Chennai
மூங்கில் துறையின் வளர்ச்சியை சீர்படுத்துவதற்காக ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் ஒப்புதல் அளித்துள்ளார். கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முற்போக்கு சிந்தனையுள்ள தொழில்முனைவோர், வடிவமைப்பாளர்கள், வேளாண் தலைவர்கள், விற்பனை நிபுணர்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பங்குதாரர்கள் இந்த குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்.
அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூங்கில் சம்பந்தமான முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், மூங்கிலின் மதிப்பு சங்கிலியுடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, துறையின் வளர்ச்சி கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு உதவுவதற்கும், அமைச்சகங்களுக்கு இடையேயான மற்றும் பொது- தனியார் ஆலோசனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மூங்கில் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும், கொள்கை இடையீடுகள் குறித்தும் அனைத்து பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து துறை வல்லுனர்களும், இதில் தீவிரமாக பணியாற்றும் இதர பங்குதாரர்களும் ஆலோசனை வழங்குவார்கள். மத்திய வேளாண்துறைச் செயலாளர் இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், தேசிய மூங்கில் இயக்கத்தின் திட்ட இயக்குநர் இதன் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். மூங்கில் மற்றும் ஊடுபயிர் நடவு, அடிப்படை செயலாக்கம், தயாரிப்பு மேம்பாடு, மதிப்புக் கூட்டல், சந்தை உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புகள், பதப்படுத்தும் இயந்திரங்கள், திறன் மேம்பாடு போன்றவற்றில் உள்ள சவால்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவார்கள்.
**************
(Release ID: 1881040)
AP/RB/RR
(Release ID: 1881125)