வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கடுமையான அலுவல் நடைமுறையை இலகுவாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற தேசிய ஒற்றைச் சாளர அமைப்புமுறை உதவிகரமாக இருக்கும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
05 DEC 2022 7:16PM by PIB Chennai
கடுமையான அலுவல் நடைமுறையை இலகுவாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற தேசிய ஒற்றைச் சாளர அமைப்புமுறை உதவிகரமாக இருக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று தேசிய ஒற்றைச் சாளர அமைப்புமுறை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒற்றை வர்த்தகப் பயனாளர் அடையாள எண்ணை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக பான் எண் பிரத்தியேக அடையாளமாக கொண்டுவரப்படக் கூடும் என்று திரு கோயல் கூறினார்.
தேசிய ஒற்றைச் சாளர அமைப்புமுறைக்கு கிடைக்கப்பட்ட 76000 விண்ணப்பங்கள்/ கோரிக்கைகளில் 48000 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 27 மத்திய அரசின் துறைகளும், 19 மாநிலங்களும் இந்த அமைப்புமுறையில் இணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய நில வங்கியும் இந்த அமைப்புமுறையில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெவ்வேறு தொழில்பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகளில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் நிலம் இந்த தளத்தில் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் தொழில் நிலங்களை வாங்குவதற்கான ஒற்றை நிறுத்தத் தளமாக இது விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
முதலீடுகளை அதிகரித்து, சுமைகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட லட்சியமிக்க முன்முயற்சியான தேசிய ஒற்றைச் சாளர அமைப்புமுறை, ‘ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறையின்' வாயிலாக அனைத்து அமைச்சகங்கள்/ துறைகள் மற்றும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை ஒன்றிணைக்கும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
**************
(Release ID: 1881026)
AP/RB/RR
(रिलीज़ आईडी: 1881124)
आगंतुक पटल : 181