வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

‘சிறுதானியங்கள்- திறன் ஊட்டச்சத்து உணவு’ மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

Posted On: 04 DEC 2022 9:50AM by PIB Chennai

புதுதில்லியில் நாளை (டிசம்பர் 5, 2022) நடைபெற உள்ள ‘சிறுதானியங்கள்- திறன் ஊட்டச்சத்து உணவு’ என்ற மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை  அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கிறார். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) வாயிலாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், சிறுதானியங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023’ நிகழ்வின் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும்.

வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பெருவாரியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்திய சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும், வர்த்தக அளவிலான கூட்டமும் நடைபெறும்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல், கௌரவ விருந்தினராக மாநாட்டில் கலந்து கொள்வார். வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பரத்வால், வேளாண் துறை செயலாளர் திரு மனோஜ் அஹுஜா, அபேடா தலைவர் டாக்டர் எம். அங்கமுத்து, வர்த்தகத்துறை துணைச் செயலாளர் டாக்டர் எம். பாலாஜி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

******

AP/RB/DL(Release ID: 1880783) Visitor Counter : 158