சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாயு தொடர்பான சர்வதேச கருத்தரங்கை ஒடிசா ஆளுநர் திரு கணேஷிலால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

Posted On: 03 DEC 2022 5:23PM by PIB Chennai

வாழ்வின் முக்கிய உயிர் சக்தியான வாயு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கத்தை ஒடிசா ஆளுநர் திரு கணேஷிலால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விடுதலையின் 75வது அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடக்க உரையாற்றிய ஆளுநர் கணேஷிலால், பிரபஞ்சத்திற்கும், மனிதகுலத்திற்கும் இடையேயான உறவை உணர்ந்து கொள்வதற்கும், ஒத்துழைப்பின் உன்னதத்தை உள்ளடக்கியதே பிரபஞ்சம் என்பதை நிலைநாட்டுவதற்கும் இத்தகையை நிகழ்ச்சிகள் உதவும் என்றார்.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பூபேந்திர யாதவ், பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் காற்று

மாசுபாடு மற்றும் பருவநிலை மாறுபாடு குறித்த சவால்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முனைப்பான நடவடிக்கைகள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், தொழிற்சாலை கழிவுகளை  சுத்திகரித்தல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை என்ற மிஷன் லைஃப்  இயக்கம், கழிவுகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றுவதற்கு அடித்தளம் அமைத்திருப்பதுடன், கணிசமாக கழிவுகளைக் குறைக்கும் யுத்திகளையும் கற்றுத்தருகிறது என்றார்.  நிலையான நுகர்வு, நீடித்த உற்பத்தி குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறையை மக்களிடையே கொண்டு செல்வது, பருவ மாறுபாடு, காற்று மாசுபாடு  பிரச்சனைகளுக்கு  தீர்வாக அமையும் என்றும் அவர் கூறினார். இதனை முன்னிறுத்தும் வகையில், ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2022ன் அடிப்படையில், தேசிய அளவில் காற்று மாசுப்பாடு இல்லாத நகரம் என்ற பெயரில் 9 நகரங்களுக்கு விருது வழங்கப்படும் என அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவித்துள்ளார்.

இந்த விருதுகளுக்கு மொத்தமாக 5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

******

AP/ES/DL


(Release ID: 1880704) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi , Odia