கலாசாரத்துறை அமைச்சகம்

விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, சத்யாகிரகி விஞ்ஞானி ஜே.சி.போஸ்ஸின் பங்களிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம்

Posted On: 03 DEC 2022 3:07PM by PIB Chennai

நாட்டின் விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக, மத்திய கலாச்சாரத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில், டெல்லியில், சத்யாகிரகி விஞ்ஞானி ஜே.சி. போஸ்ஸின் பங்களிப்பு குறித்த 2 நாள் சர்வதேசக் கருத்தரங்கம் புதுடில்லியில் நடைபெற்றது.

இந்திர பிரசாத விஞ்ஞான் பாரதி மற்றும் பல்கலைக்கழகங்களின் முன்னேற்ற மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில்,  மத்திய  கலாச்சார அமைச்சகத்தின் சார்பில், திருமதி பிரியங்கா சந்திரா பங்கேற்று, மாணவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் விடுதலையின் 75ம் ஆண்டு அமுதப் பெருவிழா குறித்தும், வலிமையான தேசத்தைக் கட்டமைப்பதில், அனைத்து சமூக மக்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதில் சுமார் 300 பள்ளி மாணவ-மாணவிகள் தாவரங்களின் வளர்ச்சி குறித்து அளவிடும் கிரிஸ்கோகிராஃப் கிட் அசம்பிளி கருவியின் மூலம் தாவரங்களின் வளர்ச்சி குறித்து அறிந்துகொண்டனர். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபிக்கும் கருவியை தேசிய அளவில் பயன்படுத்தி சாதனை படைக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

அதேபோல இரவுநேர  வானியல் நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காக வைத்திருந்த டெலஸ்கோப் வசதியும், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், ஜே.சி.போஸ் குறித்த கட்டுரை, கவிதை மற்றும், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியாக கலாச்சார நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

******

AP/ES/DL



(Release ID: 1880675) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Marathi , Hindi