வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
காப்புரிமை வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அறிவுசார் சொத்துரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தினசரி திறந்த மாநாடுகளை நடத்துகிறது
Posted On:
02 DEC 2022 3:30PM by PIB Chennai
காப்புரிமை வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அறிவுசார் சொத்துரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தினசரி திறந்த மாநாடுகளை நடத்துகிறது
நாட்டில் அறிவுசார் சொத்துரிமை சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்த, காப்புரிமை வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் 17 அக்டோபர் 2022 முதல் தினசரி “திறந்த மாநாடுகளை” நடத்த தொடங்கியுள்ளது.
https://ipindia.gov.in/newsdetail.htm?835/ என்ற இணையதளத்தின் மூலமாக இந்த திறந்த மாநாடுகளில் இணையலாம்.
அறிவு சார் சொத்துரிமை அலுவலகங்களுக்கு நேரில் செல்வதற்கான தேவையைக் குறைப்பதன் மூலம் இதைச் சார்ந்தவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்படும் நோக்கத்துடன் இந்த நடைமுறை தொடங்கப்பட்டது. இப்போது, விண்ணப்பதாரர்களின் குறைகள் மற்றும் கேள்விகள் அதிகாரிகளால் விரைவாக நிவர்த்தி செய்யப்படுகின்றன.
அக்டோபர் 17, 2022 முதல் இந்த திறந்த மாநாடு அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 முதல் 11.30 வரை நடைபெறுகிறது. நாடு முழுவதிலுமிருந்து 104 க்கும் மேற்பட்டோர் மாநாட்டின் தொடக்க அமர்வில் இணைந்தனர். காப்புரிமைகள், வடிவமைப்புகள், வணிக முத்திரைகள் மற்றும் காப்புரிமைகள் தளங்களில் எழும் சிக்கல்களை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அத்தகைய சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் வழங்கும் பரிந்துரைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் பலர் இணைகின்றனர்.
திறந்த மாநாட்டின் போது பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம், வணிக முத்திரை விளக்கம் கேட்பு விசாரணைகளுக்கான "மாறும் காரணப் பட்டியல்" முறையை 1 டிசம்பர் 2022 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் இணையதளத்திலேயே உள்ள விசாரணை அறைக்கான இணைப்பை அணுக முடியும்.
**************
SM/PLM/RS/RJ
(Release ID: 1880492)