அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நானோ மருத்துவ அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற கருப்பொருளில் இந்திய உயிரிவேதியியல் மற்றும் உயிரிஇயற்பியல் சஞ்சிகை
Posted On:
01 DEC 2022 12:58PM by PIB Chennai
சி. எஸ். ஐ. ஆர்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்திய உயிரிவேதியியல் மற்றும் உயிரிஇயற்பியல் சஞ்சிகையின் டிசம்பர் 2022 பிரதி, “நானோ மருத்துவ அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்” என்ற கருப்பொருளில் சிறப்பு இதழாக அமைந்துள்ளது. சி. எஸ். ஐ. ஆர்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க துறைகளில் 16 சஞ்சிகைகளை வெளியிடுகிறது.
உயிரி வேதியியல், உயிரி இயற்பியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முக்கிய மாதாந்திர சஞ்சிகையான இந்திய உயிரிவேதியியல் மற்றும் உயிரிஇயற்பியல் சஞ்சிகை, இந்த நிறுவனத்தால் இதே துறைகளில் வெளியிடப்படும் சஞ்சிகைகளுள் முதலிடம் வகிக்கின்றது. தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஆசிரியர் குழு புதிதாக நியமிக்கப்பட்டதை அடுத்து அதன் தொடர் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் காரணமாக உயிரி வேதியல், உயிரி இயற்பியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கவனத்தை இந்த சஞ்சிகை ஈர்த்துள்ளது.
சஞ்சிகை குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1880201
SRI/RB/RJ
**************
(Release ID: 1880276)