வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான தேசிய கவுன்சில், கட்டுமான பொருட்கள் தொடர்பான 17-வது சர்வதேச மாநாட்டை நடத்துகிறது

Posted On: 30 NOV 2022 4:14PM by PIB Chennai

சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான தேசிய கவுன்சில், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் தொடர்பான 17-வது சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான இது இந்த ஆண்டு நடத்தும் மாநாட்டின் கருப்பொருள், ‘பூஜ்ய கார்பன் உமிழ்வை நோக்கி முன்னேறுதல்’ என்பதாகும்.

டிசம்பர் 6-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு.அனுராக் ஜெயின் தொடங்கி வைக்கிறார். 9-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு.சோம் பிரகாஷ் பங்கேற்கிறார்.

எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல், சுழற்சி பொருளாதாரம், சிமெண்ட் தொழில்துறையில் ஒட்டுமொத்த தரம் போன்றவை தொடர்பான அரசின் விருதுகளும் இந்த மாநாட்டில் வழங்கப்படுகின்றன. 20 அமர்வுகளை கொண்டதாக நடைபெறும் இந்த மாநாட்டில் 150 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் கொண்ட தொழில்நுட்ப கண்காட்சியும் இடம்பெறுகிறது.

 

                                  **************

SM/PLM/KG/KRS



(Release ID: 1880011) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Hindi , Punjabi