தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கோலாகலமான நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா

Posted On: 28 NOV 2022 9:29PM by PIB Chennai

53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா, கோவாவின் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமான நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது.

ஸ்பெயின் நாட்டின் ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் (I have Electric Dreams/ Tengo sueños eléctricos), சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதைத் தட்டிச் சென்றது. சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை ஈரான் நாட்டின் கதாசிரியர் மற்றும் இயக்குநர் நாதர் சேவர், நோ எண்ட் (No End) திரைப்படத்திற்காக பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை இந்த திரைப்படத்தின் கதாநாயகர் வாஹித் மொபாசெரியும், சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் திரைப்படத்தின் கதாநாயகி டேனியலா பேரின் நவரோவும் வென்றார்கள்.

சிறப்பு நடுவர் விருது, ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் வென் த வேவ்ஸ் ஆர் கான் (When the Waves are Gone) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சினிமா பண்டி (Cinema Bandi) திரைப்படத்திற்காக இந்திய இயக்குநர், கதாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரவீன் கண்ட்ரேகுலாவிற்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. பிரபல நடிகர் பத்மபூஷன் சிரஞ்சீவிக்கு 2022-ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுகை விருது வழங்கப்பட்டது.

கடந்த 9 நாட்களில், 35,000 நிமிடங்களில் 282 திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறினார். “இந்தியாவில், திரைப்படங்களை உருவாக்குவதற்கு மேம்பட்ட சூழலியலை ஏற்படுத்தவும், எதிர்காலத்திற்கு உகந்த தொழில்துறையை உருவாக்கவும்  இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

 

வரவிருக்கும் நாட்களில் கோவாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாடு, உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் பர்பிள் திருவிழா போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அழைப்பு விடுத்தார்.

பிரபல திரைப்பட ஆளுமைகள் ஆஷா பாரேக், அக்ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா, பிரசஞ்சித் சட்டர்ஜி, ஈஷா குப்தா, மனுஷி சில்லர், ஷர்மான் ஜோஷி ஆகியோரை மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கௌரவித்தனர்.

**************

 (Release ID: 1879662)

PKV/RB/RR(Release ID: 1879721) Visitor Counter : 100


Read this release in: Hindi , English , Urdu , Marathi