தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘டொமிங்கோ மற்றும் தி மிஸ்ட்’: தங்கள் நிலத்தைப் பாதுகாக்க கிராமப்புற மக்களின் தியாகத்தை பின்புலமாகக் கொண்ட கதைக்களம்
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘டேபிள் டாக்ஸ்’ அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடிய ‘டொமிங்கோ மற்றும் தி மிஸ்ட்’ இயக்குனர் ஏரியல் எஸ்கலாண்டே மெசா,
”இந்த திரைப்படம், ஒரு மனிதனின் கடந்த காலத்தை பற்றியும், அவனது சொந்த நிலத்தை காப்பாற்ற மேற்கொள்ளும் போராட்டம் மற்றும் அதற்கு அவர் செய்யும் தியாகம் பற்றியுமான கதைக்களத்தை பின்புலமாக கொண்டது என்றார். சில சந்தேகத்திற்கு இடமான சக்திகள் கதையின் நாயகன் டொமிங்கோவை மிரட்டி, வற்புறுத்தியபோதும், அவர் மனம் தளராமல் தனது சொந்த நிலத்தை, தனது பூமிக்குரிய வசிப்பிடத்தை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த நிலத்தைப் பாதுகாப்பதற்காக எவ்வளவு தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார்.
5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கோஸ்ட்டா ரிக்கா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், உலகத்துடன் சரியான தொடர்பில் இல்லை என்று ஏரியல் கூறுகிறார்.
“எனது நாட்டில் நிலம் தொடர்பான மோதல்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. நில மோதலில் ஈடுபட்ட பழங்குடியின சமூகம் ஒன்றின் தலைவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இந்தத் திரைப்படம் அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் ஆனால் இதுவே என்னை திரைப்படத்தை உருவாக்க தூண்டியது என்றும் அவர் கூறினார்.
நில மோதல்கள் என்று வரும்போது ஒவ்வொரு சமூகத்திலும் வன்முறை பொதிந்துள்ளது என்று கூறிய ஏரியல் கூறினார்: "இந்த விஷயத்தில் தங்களுக்குள் ஒரு உரையாடலை ஏற்படுத்த கோஸ்ட்டாரிக்கன் சமூகத்தை ஊக்குவிப்பதே எனது குறிக்கோள் என்றார்.
ஸ்பானிய மொழியில் தயாரிக்கப்பட்ட கோஸ்ட்டா ரிக்கா திரைப்படம், 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'உலக சினிமா' பிரிவின் கீழ் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. 95 வது ஆஸ்கார் விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிலும் கோஸ்ட்டா ரிக்கன் நுழைவுத் தேர்வாக இந்த திரைப்படம்
தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படம் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாகும்.
**************
SM / GS / DL
(Release ID: 1879428)
Visitor Counter : 191