தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘ஐ ஹேவ் எலெக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ திரைப்படத்தில் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஏற்கத்தக்க வகையிலோ, மறுக்கத்தக்க வகையிலோ வெளிப்படுத்தவில்லை: நிக்கோலஸ் வோங்
"இது குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவத்திற்கு வருபவர்களின் பல்வேறு மாற்றங்கள், சூழ்நிலை தாக்கங்கள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான ஒரு படம். உறவுகளின் சிக்கலான தன்மைகளை விவரிக்கும் ஒரு படைப்பாகும்” என்று ‘ஐ ஹேவ் எலெக்ட்ரிக் ட்ரீம்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் திரு நிக்கோலஸ் வோங் கூறினார்.
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘டேபிள் டாக்ஸ்' அமர்வில் உரையாற்றிய திரு நிக்கோலஸ் வோங், “நவீன கால கோஸ்ட்டா-ரிக்காவின் கலாச்சாரம் மற்றும் இளமைப் பருவகாலச் சிரமங்களை சித்தரித்து, உலகின் மறுமுனையிலிருந்து வரும் கதைக்களத்தை மக்கள் அடையாளம் காணவும், அதே நேரத்தில் குடும்ப உறவின் மதிப்புகளை உலகளாவிய உணர்வுகளுடன் இணைக்கவும் இந்தப் படம் உதவும் என்று கூறினார்.
இயக்குனர் வாலண்டினா மௌரல், வாழ்க்கையின் சிக்கலான தன்மையின் நேர்மையான வடிவத்தை முன்வைப்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்றார்.
"மேலும் இந்த படத்தின் மூலம் இதுபோன்ற சிக்கலான உறவுமுறைகளில் பார்வையாளர்கள், அவர்களின் சொந்த நிலைப்பாட்டை ஆய்வு செய்யும் வகையில் இயக்குனர் முயற்சி எடுத்துள்ளார்” என்று நிக்கோலஸ் வோங் கூறினார். இளம் தலைமுறையினருக்கு இப்படம் தெரிவிக்கும் செய்தியைப் பற்றி பேசும்போது, காதல் மற்றும் வளர் பருவத்தில் வரும் சிக்கலான அம்சங்கள் அனைத்தையும் படம் ஆராய்கிறது என்றார்.
அவர் கதையின் நாயகியான ஈவாவை பற்றிக் கூறும் போது, 19 வயது புதுமுக நடிகையான டேனியலா மரின் நவரோவுக்கு, திரைக்கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து மிக ஆழமான புரிதல் இருந்ததாக நிக்கோலஸ் குறிப்பிட்டார். அதனால் அவருக்கு இயல்பாக நடிக்க முடிந்தது. அவர் மிகவும் அமைதியாகவும், புத்திசாலியாகவும் இருந்தார்,'' என்றார்.
**************
SM / GS / DL
(Release ID: 1879423)