தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஎப்எப்ஐ-யில் போட்டியா மொழி திரைப்படம் படால்-டீ
"படால்-டீ இயற்கைக்கு எதிரான மனிதனின் நடவடிக்கைகள் பற்றிய படம். படால்-டீ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முகுந்த் நாராயண், 53வது சர்வதேச திரைப்பட விழாவில் டேபிள் டாக்ஸ்' அமர்வில் கலந்து கொண்டார். நம் நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகக் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதைகளின் வளமான பாரம்பரியத்தைச் சுற்றி இந்த படம் உருவாகிறது என்று அவர் கூறினார்.
பல்வேறு சமூக சக்திகளால் அழிந்து வரும் போட்டியா போன்ற பழங்குடி மொழிகளின் சவால்களையும் படால்-டீ எடுத்துக்காட்டுகிறது என்று முகுந்த் நாராயண் கூறினார்.
“படால்-டீ மூலம் போட்டிய பழங்குடியினரின் கதையைச் சொல்ல விரும்பினோம், ஆனால் பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ஒரு தடையாக இருந்தபோதிலும், ரெசூல் பூக்குட்டி உட்பட பாலிவுட்டில் இருந்து பலர் போஸ்ட் புரொடக்ஷனில் எங்களுக்கு உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ”, தயாரிப்பு செயல்முறை பற்றி முகுந்த் நாராயண் கூறினார்.
இந்திய மொழிப் படங்களின் எதிர்காலம் குறித்து பேசிய இணை இயக்குநர் சந்தோஷ் சிங், பிராந்தியங்கள் 'புதிய உலகமாக' மாறி வரும் ஒரு சகாப்தத்தில் நாம் நுழைகிறோம் என்றும் கூறினார். காந்தாரா அல்லது வாக்ரோ அல்லது ஃபிரேம் என இன்று இந்தியாவில் இருந்து வரும் பிராந்திய படங்கள் உலகையே வென்று வருகின்றன என்றார் அவர்.
படம் பற்றி
இயக்குனர்: முகுந்த் நாராயண் மற்றும் சந்தோஷ் சிங்
தயாரிப்பாளர்கள்: முகுந்த் நாராயண் மற்றும் சந்தோஷ் சிங்
திரைக்கதை: முகுந்த் நாராயண் மற்றும் சந்தோஷ் சிங்
ஒளிப்பதிவாளர்: பிட்டு ராவத்
எடிட்டர்: பூஜா பிள்ளை, சன்யுக்தா காசா
நடிகர்கள்: ஆயுஷ் ராவத், கமலா தேவி குன்வர், தமயந்தி தேவி, தன் சிங் ராணா, பகத் சிங் பர்பால்
2021 | போட்டியா | வண்ணம் | 24 நிமிடங்கள்
சுருக்கம்:
பதின்மூன்று வயது ஃபக்னுவால் தாத்தா இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவரது தாத்தா நோய்வாய்ப்பட்ட பிறகு, அவரது பாட்டியின் எச்சரிக்கையை மீறி, ஃபக்னு ஒரு இமயமலை ஆவியால் பாதுகாக்கப்படும் ஒரு நிலத்தில் புராணம் மற்றும் பொருள்களுக்கு மத்தியில் இருப்பதாகக் கூறப்படும் 'புனித நீர்' என்று அழைக்கப்படுவதைத் தேடுவதில் கடினமான தேடலைத் தொடங்குகிறார்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்: முகுந்த் நாராயண் மற்றும் சந்தோஷ் சிங் ஆகியோர் சினிமாவை மிகவும் அணுகக்கூடிய ஊடகமாகக் கருதும் கதைசொல்லிகள். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் . திரைப்படத் தயாரிப்பில் முறையான பயிற்சி இல்லாதவர்கள், அறியப்படாத இந்தியாவில் உள்ள தொன்மங்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களை ஆராய விரும்புகின்றனர். படால்-டீ அவர்களின் முதல் படம்.
**************
SM / PKV / DL
(Release ID: 1879422)
Visitor Counter : 168