தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசாமிய பல்துறை வித்தகர் ஸ்ரீமந்த சங்கரதேவாவுக்கு 'குருஜனா' ஒரு இசை அஞ்சலி

பல்துறை வித்தகர் ஸ்ரீமந்த சங்கர்தேவாவை அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதி மக்கள் குருஜனா (மூத்த சகோதரர்) என்று அழைக்கிறார்கள் என்று இயக்குனர் சுதிப்தோ சென் கூறினார். இன்று கோவாவில் பிஐபி ஏற்பாடு செய்திருந்த ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடனான உரையாடலில் அவர் பேசினார்.

சங்கர்தேவா ஒரு ஆன்மீக துறவியாக மட்டுமல்ல, ஒரு அற்புதமான எழுத்தாளராகவும் இசைக்கலைஞராகவும் விளங்கினார் என்று சுதிப்தோ சென் மேலும் கூறினார். பிரஜ்வலி என்ற புதிய இலக்கிய மொழியை அவர் உருவாக்கினார்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது நாடு ‘பக்தி’ இயக்கத்தின் வடிவத்தில் சீர்திருத்த மறுமலர்ச்சியைக் கண்டது. சங்கர்தேவாவின் செய்தியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பிய  நான், படத்தின் மூலம் அவருக்கு ஒரு இசை அஞ்சலியை அளித்துள்ளேன்” என அவர் கூறினார்.

கோவாவில் நடைபெற்று வரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் குருஜனா திரையிடப்பட்டது.

 

சுருக்கம்:

15-16 ஆம் நூற்றாண்டின்  வைஷ்ணவ துறவி, ஸ்ரீமந்த சங்கரதேவா ஒரு மதத் தலைவர் மட்டுமல்லாமல் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். சாதி அமைப்பு மற்றும் கடுமையான மத நடைமுறைகளின் பிடியில் இருந்து சமூகத்தை விடுவிக்க இடைவிடாமல் போராடினார். இயல்பிலேயே முற்போக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், பாரதநாட்டில்  சமத்துவ சமுதாயத்தை உருவாக்க விரும்பினார். அவரைப் பின்பற்றுபவர்களால் குருஜனா  என்று அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.

 

நடிகர்கள் & குழுவினர்:

இயக்குனர்: சுதிப்தோ சென்

தயாரிப்பாளர்: இந்திரா காந்தி தேசிய கலை மையம்

திரைக்கதை: சுதிப்தோ சென், ரியா முகர்ஜி

ஒளிப்பதிவாளர்: ஆஷிஷ் குமார், ஷோபிக் மல்லிக்

ஆசிரியர்: ஹிமாத்ரி சேகர் பட்டாச்சார்யா

2022 | ஆங்கிலம் | வண்ணம் | 50 நிமிடங்கள்

 

இயக்குனர் பற்றி:

தி அதர் வெல்த் (1996), தி லாஸ்ட் மாங்க் (2007), அக்னூர் (2007), லக்னோ டைம்ஸ் (2015) மற்றும் ஆஸ்மா (2018) ஆகிய  வெற்றிகரமான சர்வதேச  திரைப்பட விழாக்களில் பங்கேற்ற படங்களை இயக்கிய இந்தியத் திரைப்பட இயக்குநர் சுதிப்தோ சென்.

**************

SM / PKV / DL


(रिलीज़ आईडी: 1879420) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Urdu , English , Marathi