தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் கலந்துரையாடல் அமர்வில், தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக் பங்கேற்பு
2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே விருது பெற்றதன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பழம்பெரும் நடிகை திருமதி ஆஷா பரேக், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். விருதைப் பெற்றதில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய அவர், “இந்த விருதைப் பெற்ற முதல் குஜராத்தியும் நான்தான். இது எனக்கு ஒரு பெரிய பாக்கியமாகும். நான் முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்.
2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே விருது திருமதி ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவில் அவரது வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. 2022
செப்டம்பர் 30 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்களால் சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக இந்தியாவின் இந்த உயரிய விருதை அவருக்கு வழங்கினார்.
கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய திருமதி ஆஷா பரேக், கடி பதாங், தீஸ்ரி மன்சில், தோ பதன், மைன் துளசி தேரே ஆங்கன் கி, பஹாரோன் கே சப்னி போன்ற பல்வேறு படங்களில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசினார்.
நடிப்பைத் தவிர, தொலைக்காட்சித்தொடர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் தனது பங்களிப்பு பற்றியும் பேசினார்.
குஜராத்தி தொலைக்காட்சித்தொடர் - ஜோதி வெற்றிகரமாக அமைந்தது தனக்கு நம்பிக்கையை அளித்ததாக அவர் கூறினார். திருமதி ஆஷா பரேக் திரைப்படத் துறை தொடர்பான பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களுடனான தனது தொடர்பு பற்றியும் பேசினார்.
அவர் 1994 முதல் 2000 வரை சினி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷனின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (தணிக்கை வாரியம்) தலைமைப் பொறுப்பு வகித்த முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றவர். அவர் இந்த கௌரவ பதவியில் 1998- 2001 வரை இருந்தார். அவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சங்கத்தின் பொருளாளராகவும் பணியாற்றினார்.
திருமதி ஆஷா பரேக் ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் ஒரு சிறந்த இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தில் தேகே தேக்கோவில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார். அவர் 95 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
**************
SM / GS / DL
(Release ID: 1879418)
Visitor Counter : 221