தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

முன்முன் தலாரியாவின் ‘சூ மெட் நா யுல் மெட்’ (தண்ணீர் இல்லை, கிராமம் இல்லை) உயரமான இமயமலை கிராமங்களில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை ஆவணப்படுத்துகிறது

‘வாய்ஸ் ஃப்ரம் தி ரூஃப் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற பத்து பாகத் தொடரின் இந்திய அத்தியாயமான ‘ச்சு மெட் நா யுல் மெட்’-ன் இந்தியன் பிரீமியர் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா கதை அல்லாத படப் பிரிவில் திரையிடப்பட்டது.  இன்று கோவாவில் பிஐபி  ஏற்பாடு செய்திருந்த ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடனான உரையாடலில் பேசிய இயக்குனர் முன்முன் தலாரியா, திரைப்படத்தின் பின்னணியில் உள்ள தனது பார்வை மற்றும் நோக்கம் குறித்தும், உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை எவ்வாறு உள்ளது என்பதையும் விளக்கினார்.

படத்தின் தலைப்பு லடாக்கி மொழியில் ‘தண்ணீர் இல்லை, கிராமம் இல்லை’ என்பதாகும். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி மற்றும் லடாக்கின் ஜன்ஸ்கர் ஆகிய விவசாயக் கிராமங்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் சவால்களை படத்தின் மூலம் இயக்குனர் விளக்கியுள்ளார்.

அவரது உத்வேகத்தை தெளிவுபடுத்திய இயக்குனர் முன்முன் தலாரியா, தான் ஒரு வன உயிர் திரைப்படத் தயாரிப்பாளர் என்றும், மேல் இமயமலைச் சமூகங்களின் மீது வெறி கொண்டவர் என்றும் கூறினார். அவர் கூறுகையில், "நான் இமாச்சல பிரதேசத்தில் இருந்து வந்துள்ளேன், கடந்த 7 ஆண்டுகளாக நான் ஸ்பிதி பள்ளத்தாக்குக்கு திரும்பி வருகிறேன், மைனஸ் 20 டிகிரியில் வாழும் பெண்களின் வாழ்க்கையின் விந்தை, நான் ஸ்பிட்டிக்குச் சென்று சமூகத்துடன் வாழத் தொடங்கியவுடன், பருவநிலை மாற்றம்தான் உண்மையான கதை என்பதை உணர்ந்தேன். ஒழுங்கற்ற பனிப்பொழிவு மற்றும் உருகும் பனிப்பாறைகள், அவை இந்தியாவில் உள்ள உயரமான கிராமங்களின் விவசாய சமூகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்று அவர் கூறினார்.

 “ஐரோப்பாவில் வசிக்கும் ஆண்ட்ரூ என்னை அணுகினார். 10 பாகங்கள் கொண்ட தொடரான ‘வாய்ஸ் ஃப்ரம் தி ரூஃப் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற தொடரின் நிர்வாக தயாரிப்பாளராக அவர் இருக்கிறார். இது தொடரின் இந்தியா எபிசோட். இரண்டாவது தொடர் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதால் தயாரிப்பாளர் இங்கு இருக்க முடியவில்லை. பருவநிலை மாற்றம் தேசிய எல்லைகளைக் காணாததால், நாங்கள் மற்ற நாடுகளில் தேசிய ஒளிபரப்பைச் செய்து வருகிறோம். நாங்கள் ரஷ்யா கிர்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் திரைப்படங்களைக் காண்பிக்கிறோம், மேலும் இந்தியப் பார்வையாளர்கள் குறிப்பாக ஹிமாச்சல், உத்தரகண்ட் மற்றும் தில்லி மக்கள் பருவநிலை மாற்றப் பிரச்சினைகளால் நேரடியாகப் பாதிக்கப்படும் அனைத்து மேல் பகுதிகளிலும் படத்தைக் காட்ட  விரும்புகிறேன்’’ என்று அவர் கூறினார்.

முன்முன் தலாரியா, வனவிலங்கு பாதுகாப்பு, பாலினம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஆவணப்படங்களுக்காக அறியப்பட்ட ஒரு விருது பெற்ற ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது படங்கள் நேஷனல் ஜியோகிராஃபிக், ஹாட்ஸ்டார் மற்றும் வைஸ் வேர்ல்ட் நியூஸ் ஆகியவற்றில் திரையிடப்பட்டுள்ளன.

மத்திய ஆசியாவில் உள்ள பாமிர்ஸ் முதல் தெற்காசியாவின் காரகோரம் மற்றும் இமயமலை வரை உலகின் கூரை என்று அழைக்கப்படும் - துருவங்களுக்கு வெளியே பூமியின் மிகப்பெரிய பனிக் களஞ்சியத்துடன் - பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் விகிதத்தில் எப்படி உருகுகிறது என்பதை படம் எடுத்துக்காட்டுகிறது. இந்த உயரமான பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரழிவுகள் லட்சக்கணக்கான உயிர்களை எப்படி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்பதை இயக்குனர் படத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார். மனிதகுலத்தின் பெரும் பகுதியினர் இந்த மலைகளையும், ஆசியாவின் வலிமைமிக்க ஆறுகளையும் நம்பியிருக்கிறார்கள்.

**************

SRI / PKV / DL

iffi reel

(Release ID: 1879231) Visitor Counter : 143
Read this release in: English , Marathi , Urdu , Hindi