தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வாழ்க்கையின் கொள்கைகள் குறித்து பேசும் நேரம் இது, வெகு சிலரே இத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்: ‘‘மகாநந்தா’ இயக்குனர் அரிந்தம் சில்
“நாம் போராடுவது அனைத்தும் உண்மையான இந்திய மக்களுக்காகத்தான். நாட்டின் ஜனாதிபதி யார்? கொல்கத்தா அல்லது மும்பை எங்கே உள்ளது? என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இவர்கள்தான் இந்தியாவின் உண்மையான மக்கள்”. இந்த வார்த்தைகளை கூறிய எழுத்தாளர்-சமூக ஆர்வலர் மஹாஸ்வேதா தேவியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் திரைப்படம் ‘மகாநந்தா’. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் இந்தியன் பனோரமா - ஃபீச்சர் ஃபிலிம் பிரிவில் இடம்பெற்றுள்ள பெங்காலி திரைப்படம், விழாப் பிரதிநிதிகளுக்கு திரையிடப்பட்டது.
இன்று கோவாவில் நடைபெற்ற டேபிள் டாக்ஸ்/பத்திரிக்கையாளர் அமர்சில் விழாப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய இயக்குநர் அரிந்தம் சில், இந்தச் சிக்கலான காலத்தில் இந்த ஒரு விஷயத்தை நோக்கி பயணிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறினார். “வாழ்க்கையின் கொள்கைகளைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது, ஏனெனில் இன்று மிகக் குறைவான மக்களே கொள்கைகளின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள். கொள்கைகளின் அடிப்படையில் வாழ்ந்த ஒரு சிலரில் மஹாஸ்வேதா தேவியும் ஒருவர். கொள்கைகளின்படி வாழ நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நேரம் இது என்று நான் உணர்கிறேன்.” என்று கூறினார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் பண்டிட் பிக்ரம் கோஸ், நேற்று சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். டேபிள் டாக்ஸ் அமர்வில் அரிந்தம் சில் உடன் இணைந்த கலைஞர், இந்தத் படம் இசை ரீதியாக ஒரு சவாலான வேலை என்று தெரிவித்தார். “படத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. சோகம், மரணம், துக்கம் என அவர் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத அச்சுறுத்தல் ஆகும்.” என்று கூறினார். இந்த அச்சுறுத்தலை வெளிக்கொணர முற்றிலும் பழங்குடி இசை பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டுள்ளது, என்று இசையமைப்பாளர் விளக்குகிறார்.
30 வயது முதல் 75 வயது வரை உள்ள மகாஸ்வேதா தேவியாக நடித்த கதாநாயிகி கார்கி ராய்சௌத்ரி, பல செயற்கை தொழில்நுட்பம் மற்றும் ஒப்பனை மூலம் மகாஸ்வேதா தேவியாக தான் நடித்ததை மிகவும் ரசித்ததாக கூறினார்.
**************
PKV / SRI / DL
(Release ID: 1879226)
Visitor Counter : 173