தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பாத்திமா – ஆட்கடத்தல் பற்றிய சக்திவாய்ந்த ஆவணப்படம் 53வது இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
கடத்தப்பட்ட பாலியல் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்த சௌரப் காந்தி தத்தாவின் பாத்திமா என்ற ஆவணப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் திரையிடப்பட்டது. 9 வயதில் ஒரு பாலியல் தரகரை மணந்து, 12 வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகி ஒரு கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்த பாத்திமா காதுனின் வாழ்க்கையின் கதையை படம் விவரிக்கிறது. இப்போது பாத்திமா, இந்தோ-நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ஃபோர்பேஸ்கஞ்ச் என்ற சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு கடத்தப்பட்ட சிறுமிகளை விடுவிக்க போராடுகிறார்.
"டேபிள் டாக்ஸ்" அமர்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் உரையாற்றுகையில், உணர்ச்சிவசப்பட்ட பாத்திமா காதுன் கண்ணீர் மல்க, இளம் வயதில் நெருங்கிய மற்றும் அன்பானவர்களால் துரோகத்துக்குள்ளானதை விவரித்தார். 1871 கிரிமினல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்ட அவரது நாடோடி சமூகத்தில் உள்ள தலைமுறைகளுக்கு இடையேயான பாலியியல் தொழில் மற்றும் சிறுமிகளை பாலியியல் தொழிலுக்குள் ஈடுபடுத்துவதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கான மன வலிமையைத் தான் எவ்வாறு பெற்றார் என்பதை அவர் விவரித்தார்.
இயக்குனர் சௌரப் காந்தி தத்தா ஊரடங்கினால் ஒன்றரை வருடங்களை இழந்தது மற்றும் அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் பற்றி பேசினார். ஆனால் அவரது படம் இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற ஒரு மேடையில் திரையிடப்பட்டதில் மகிழ்ச்சியடைந்தார்.
"நான் ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கவில்லை, ஏனென்றால் அது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகமாக மாறும் - நான் செய்ய விரும்பிய ஆவணப்படமாக அல்ல", என்று சௌரப் கூறினார். நீதிமன்றங்கள் அல்லது காவல் நிலையங்களைப் போல் இல்லாமல், கேமராவின் முன் தனது போராட்டங்களை பகிர்வது எளிதல்ல. பாத்திமா தனது கதையை கேமராவில் விவரிக்க பெரும் தைரியத்தைக் காட்டியுள்ளார்” என்று அவர் மேலும் கூறினார். "அந்த உலகத்திற்கு எனது சாளரமாக இருந்ததற்காக பாத்திமாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று சௌரப் கூறினார்
ஆவணப்படம் பெயர்: பாத்திமா
இயக்குனர்: சௌரப் காந்தி தத்தா
காலம்: 59 நிமிடம்
**************
PKV / SRI / DL
(Release ID: 1879219)
Visitor Counter : 150