தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
குழந்தையை தொலைத்த ஒரு தாயின் வலியையும் அதிர்ச்சியையும் சோலின் பயணம் விளக்குகிறது
கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச பனோரமாவின் கீழ் திரையிடப்பட்ட மெக்சிகன் திரைப்படமான சோல்ஸ் ஜர்னி, மெக்சிகோவில் நடக்கும் மனித கடத்தலை அடிப்படையாக கொண்ட கதையாகும்.
இன்று நடந்த டேபிள் டாக்ஸ் அமர்வில் உரையாற்றிய படத்தின் இயக்குனர், கிளாடியா சைந்தே லுஸ் , மனித கடத்தல் மற்றும் அதன் தீவிரமான சமூக தாக்கங்களை படம் எடுத்துக்காட்டுகிறது என்றார். "மெக்ஸிகோவில், ஒரு பகுதி மக்கள் மனிதர்களை உண்மையில் மதிப்பதில்லை. மனிதர்களை விட செல்லப் பிராணிகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அளவுக்கு பிரச்சினை சென்றுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் காணாமல் போன செல்லப்பிராணிகளைப் பற்றி உண்மையில் கவலைப்படுகிறார்கள், இது பற்றிய அதிக எண்ணிக்கையிலான சுவரொட்டிகளில் இருந்து தெளிவாகிறது, ஆனால் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றி, குறிப்பாக குழந்தைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, ”என்று அவர் கூறினார்.
இந்தத் திரைப்படம் தனது ஏழு வயது குழந்தை 'கிறிஸ்டியன்' கடத்தப்படும்போது ஒரு தாய் எதிர்கொள்ளும் உளவியல் அதிர்ச்சி மற்றும் வலியை பிரதிபலிக்கிறது."சமூகத்தின் மனநிலையையும், நீதித்துறையில் உள்ள குறைபாடுகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது" என்று கிளாடியா விவரித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய தயாரிப்பாளர் கிறிஸ்டியன் கிரெகல், குழந்தை கடத்தல் தொடர்பான முக்கியமான பிரச்சனையை வெளிப்படுத்த திரைப்படக்குழு முயற்சி மேற்கொண்டுள்ளது. நாங்கள் எங்களால் முடிந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம், இதனால் படம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதுடன் நாகரிகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்: கிளாடியா செயின்ட்-லுஸ்
தயாரிப்பாளர்: கிறிஸ்டியன் கிரெகல்
தொகுப்பாளர்கள்: ஜூலியன் பெலிப், சர்மிண்டோ லோபஸ்
நடிகர்கள்: அனஜோஸ் ஆல்ட்ரெட் எச்செவர்ரியா, அர்மாண்டோ ஹெர்னாண்டஸ்
கிளாடியா செயின்ட்-லுஸ் (1982, வெராக்ரூஸ்) ஒரு மெக்சிகன் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகை. குவாடலஜாரா பல்கலைக்கழகத்தில் காட்சி கலையில் பட்டம் பெற்றார். அவரது முதல் படமான தி அமேசிங் கேட்ஃபிஷ் (2013) லோகார்னோவில் திரையிடப்பட்டது, அங்கு சிறந்த படத்திற்கான இளம் ஜூரி பரிசைப் பெற்றது. 2022 ஆம் ஆண்டில், பெர்லினாலில் தி ரியம் ஆஃப் காட் உலக அரங்கேற்றத்தை கிளாடியா நடத்தினார்.
சுருக்கம்
ஏழு வயது கிறிஸ்டியன் அவனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டான். அவரது தாயார் சோல், நீதித்துறையின் அலட்சியத்தையும் தாமதத்தையும் உணர்ந்த பிறகு, தன் வழக்கை விசாரிக்கத் தானே ஒரு வெறித்தனமான தேடலைத் தொடங்குகிறார்.
**************
SRI / PKV / DL
(रिलीज़ आईडी: 1879217)
आगंतुक पटल : 188