தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

ஒரே நாளில் புகைப்பட பத்திரிக்கையாளர்களின் அனுபவம்

"இன்றைய பரபரப்பான உலகில் பிரத்தியேகமான செய்திகளுக்கு இடம்  இல்லை" என்று பிரேம் படத்தின் இயக்குனர் விக்ரம் பட்வர்தன் கூறியுள்ளார். புகைப்படம் எடுப்பதில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஒரு தொழிலாக புகைப்பட இதழியல் சமீப காலங்களில் பெரும்  மாற்றத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள 'டேபிள் டாக்ஸ்' அமர்வு ஒன்றில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடியபோது, விக்ரம் பட்வர்தன், ஃபிரேம் ஒரு புகைப்படப் பத்திரிகையாளரின் வாழ்க்கையைப் பற்றியது என்று கூறினார். ஒரு புகைப்படப் பத்திரிக்கையாளரின் தர்மம் என்பது ஒரு நிகழ்வை அப்படியே, திரிபுபடுத்தாமல், மக்களுக்கு அளிப்பதுதான் என அவர் தெரிவித்தார்.

ஒரு புகைப்பட பத்திரிக்கையாளரின் வாழ்க்கையை தனது பணி அனுபவத்தில் இருந்து விளக்கிய அவர், "புகைப்பட பத்திரிக்கையாளர்கள் ஒரு நாளில் பலவிதமான உலகங்களில் வாழ்கிறார்கள், மேலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அனுபவங்களுக்கு உள்ளாகிறார்கள்" என்றார். தனது சொந்த பணி அனுபவத்தைப் பயன்படுத்தி ஒரு புகைப்பட பத்திரிக்கையாளர் எதிர்கொள்ளும் சவால்களை சித்தரிக்க விரும்பியதாக  அவர் தெரிவித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பயணம் பற்றிப் பேசிய விக்ரம் பட்வர்தன்குழுவாக பணிபுரிவது ஒரு பெரும் பலம். இப்படத்தில் இக்குழுப்பணி இந்த பயணத்தை வெகு சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றியது என்றார். அவரது குழு நன்றாக அமைந்ததால், இருபது நாட்களில் முழு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக அவர் கூறினார்.

படம் பற்றி;

இயக்குனர்: விக்ரம் பட்வர்தன்

தயாரிப்பாளர்: ஜீ ஸ்டுடியோஸ், ஆட்பாட்

திரைக்கதை: விக்ரம் பட்வர்தன்

ஒளிப்பதிவாளர்: மிலிந்த் ஜோக்

ஆசிரியர்: குதுப் இனாம்தார்

நடிகர்கள்: நாகராஜ் மஞ்சுலே, அமே வாக், முகதா கோட்சே, அக்ஷயா குரவ்

சுருக்கம்:

"எங்கள் தொழிலைப் போலவே, எங்கள் வாழ்க்கையும் ஒரு கலை, எந்த கலைக்கும் எந்த வடிவமும் இல்லை," என்று நாற்பத்தைந்து வயதான சந்து பன்சாரே கூறுகிறார்.  சித்தார்த் தேஷ்முக் இளம் புகைப்பட பத்திரிகையாளர். இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு நாளிதழில் பணிபுரிகின்றனர். சந்துவின் மேற்கோளை உயிர்ப்பிப்பதன் மூலம், அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையின் நிச்சயமற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சி மற்றும் தெற்கு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அவர்களின் வாழ்க்கையின் போக்கை எவ்வாறு மாற்றுகிறது என்பதே கதை.

இயக்குனர்: விக்ரம் பட்வர்தன் மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு புகைப்பட பத்திரிக்கையாளர். கலாச்சாரம் முதல் குற்றம் வரை அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளை படம் பிடித்தவர். பிரேம் இயக்குநராக அவர் அறிமுகமான படம்.

தயாரிப்பாளர்: Zee ஸ்டுடியோஸ் என்பது திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், சர்வதேச விநியோகம், விளம்பரம் மூலம்  வருவாய் ஈட்டும் முன்னணி நிறுவனம். 2012 இல் நிறுவப்பட்ட ஒரு விருது பெற்ற திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக ஸ்டுடியோ ஆகும்.

**************

SRI / PKV / DL

iffi reel

(Release ID: 1879153) Visitor Counter : 226