பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுதந்திர அமிர்த காலப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் வடகிழக்கு பிராந்தியத்தில் இந்திய கடற்படை-ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் பயணம்

प्रविष्टि तिथि: 25 NOV 2022 3:35PM by PIB Chennai

சுதந்திரத்தின்  அமிர்த காலப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் வடகிழக்கு பிராந்தியத்தில் இந்திய கடற்படை-ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க   மோட்டார் சைக்கிள் பயணத்தை 2022, நவம்பர் 25 முதல் டிசம்பர் 14-ம் வரை நடத்துகிறது.

இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தை குவகாத்தியில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் திரு. ஆர் ஹரிகுமார் தொடங்கி வைத்தார். இந்தப் பயணம் வடகிழக்கு இந்தியாவில், 15 மோட்டார் சைக்கிள்களின் மூலம் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 24 நாட்களில் முடிக்கும். இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தின் நோக்கமானது, வடகிழக்கு இந்தியாவில் கடற்படை  குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சுற்றுலா, விளையாட்டு மற்றும் சாகச நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பில் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878820

                                                                                                                   ••••••••••

AP/GS/RJ/KRS


(रिलीज़ आईडी: 1878892) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी