பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின  ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார்
                    
                    
                        ‘லச்சித் போர்புகான்- முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாமின் நாயகன்’ புத்தகத்தை வெளியிட்டார்
“லச்சித் போர்புகானின் வாழ்க்கை ‘நாடு முதலில்’ என்ற மந்திரத்தை உயிர்ப்பிக்க  நமக்கு உத்வேகம் அளிக்கிறது”
“லச்சித் போர்புகானின் வாழ்க்கை, வாரிசு மற்றும் உறவினர்களுக்கு பதிலாக நாட்டை உயர்வாக கருதவேண்டும் என்பதை  கற்றுத்தருகிறது”
“நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து  நமது தேசம் ஞானிகளாலும் துறவிகளாலும் வழிநடத்தப்படுகிறது”
“லச்சித் போர்புகான்  போன்றோரின் அஞ்சாநெஞ்சங்கள் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகளின்  அழிவுக்கு  வழி ஏற்படுத்தின. இந்தியர்களின் வழியாக வாழ்க்கை ஒளி இன்னமும் நிலைபேறு  உடையதாக இருக்கிறது”
“இந்தியாவின் வரலாறு வளர்ந்து வரும் வெற்றியைப் பற்றியது, எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தைப் பற்றியது”
“துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைக்கால சதியால் எழுதப்பட்ட அதே வரலாறு நமக்கு கற்றுத்தரப்பட்டுள்ளது”
“ஒரு தேசம் அதன் உண்மையான கடந்த காலத்தை காணும்போது மட்டுமே அதன் அனுபவங்களிலிருந்து எதிர்காலத்திற்கு சரியான திசையில் அது செல்லமுடியும். நமது வரலாற்று உணர்வு ஒரு சில  தசாப்தங்கள் மற்றும்
                    
                
                
                    Posted On:
                25 NOV 2022 1:34PM by PIB Chennai
                
                
                
                
                
                
                லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின  ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில்  இன்று (25.11.2022)  நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  இந்த நிகழ்வில்,‘லச்சித் போர்புகான் - முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாமின் நாயகன்’  என்ற நூலினையும் அவர் வெளியிட்டார்.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை உரிய முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை  அடிப்படையில், முகலாயர்களை தோற்கடித்த அசாமின் அகோம் மன்னர்கால ஆட்சியின் ராணுவ ஜெனரலாக புகழ்பெற்ற லச்சித் போபுர்கானின் 400-வது பிறந்தநாளை  கௌரவித்து இன்றைய விழா கொண்டாடப்பட்டது. இவர் ஔரங்கசீபின் கீழ் இருந்த முகலாயர்களின் எல்லை விரிவாக்க விருப்பங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். 
இந்த விழாவில், கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் வீர் லச்சித் போன்ற தீரமிக்க புதல்வர்களை  வழங்கியதற்காக அசாம் பூமிக்கு தமது நன்றியைத் தெரிவித்து உரையைத் தொடங்கினார். “லச்சித் போர்புகானின் வீரத்திற்கு அவரது 400-வது பிறந்த நாளில் நாம் அவருக்கு தலை வணங்குகிறோம். அசாமின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறார்” என்று அவர் கூறினார்.  
சுதந்திரத்தின் அமிர்தப்பெருவிழாவை நாடு கொண்டாடும் நேரத்தில் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் நிலைத்த கலாச்சாரம், நிலைத்த வீரம், நிலைத்த சகவாழ்வு என்ற மகத்தான பாரம்பரியத்திற்கு இந்த விழாவின் போது, நான் தலைவணங்குகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா தனது கலாச்சார பன்மைத்துவத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி வரலாற்றில் அறியப்படாத நாயகர்கள், நாயகிகளையும் அதிகரிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். லச்சித் போர்புகான் போன்ற பாரதத் தாயின் அழியாப் புகழ் கொண்ட புதல்வர்கள் அமிர்த காலத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு  உந்துசக்தியாக விளங்குகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மனிதகுல வாழ்க்கையின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஏராளமான நாகரீகங்கள் இருந்துள்ளன. இவற்றில் பல, அழிவற்றதாக இருந்தாலும் காலச்சுழற்சியில், அவை அடிபணிந்துள்ளன. எஞ்சியுள்ள நாகரீகங்களின் அடிப்படையில், வரலாற்றை உலகம் இன்று மதிப்பீடு செய்யும்போது  இந்தியா பல எதிர்பாராத திருப்பங்களையும் கற்பனை செய்ய இயலாத வகையில், அந்நிய ஊடுருவல்களையும் ஆற்றலுடன் எதிர்கொண்டிருப்பது தெரிகிறது. இது நிகழ்வதற்கு காரணம் நெருக்கடியான நேரத்தில், ஆளுமைகள் அவற்றை சமாளித்து முன்னேறுகிறார்கள் என்ற உண்மை நிலைதான் என்று பிரதமர் தெரிவித்தார். லச்சியா போர்புகான்  போன்றோரின் அஞ்சாநெஞ்சங்கள் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகளின்  அழிவுக்கு  வழி ஏற்படுத்தின. இந்தியர்களின் வழியாக வாழ்க்கை ஒளி இன்னமும் நிலைபேறு உடையதாக இருக்கிறது என்று அவர் கூறினார். 
அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் ஒப்பற்ற வீரத்தைக் கொண்டிருந்தன என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த மண்ணின் மக்கள், துருக்கியர்கள், ஆஃப்கானியர்கள், முகலாயர்கள் ஆகியோரைக் கண்டிருக்கிறார்கள் என்றும், பல தருணங்களில் அவர்களை விரட்டியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். முகலாயர்கள், குவஹாத்தியை கைப்பற்றியபோதும் லச்சித் போர்புகான் போன்றோரின் வீரத்தால் முகலாயர்கள் சக்ரவர்த்திகளின் பிடியிலிருந்து அது விடுதலைப் பெற்றது என்று  அவர்  குறிப்பிட்டார். 
இந்தியாவின் வரலாறு அடிமைத்தனம் பற்றியது மட்டுமல்ல; வளர்ந்து வரும் வெற்றியைப் பற்றியது, எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தைப் பற்றியது, துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைக்கால சதியால் எழுதப்பட்ட அதே வரலாறு நமக்கு கற்றுத்தரப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின் நம்மை அடிமைப்படுத்திய அந்நியர்கள் பற்றிய தகவல் தொகுப்பில் மாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால், அப்படி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீற்றமிக்க போராட்ட வரலாறுகள்  வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. மைய நீரோட்டத்தின் இந்த சம்பவங்கள் சேர்க்கப்படாத தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
லச்சித் போர்புகானின் வாழ்க்கை ‘நாடு முதலில்’ என்ற மந்திரத்தை உயிர்ப்பிக்க  நமக்கு உத்வேகம் அளிக்கிறது என்று கூறிய பிரதமர், அவரது வாழ்க்கை, வாரிசு மற்றும் உறவினர்களுக்கு பதிலாக நாட்டை உயர்வாக கருதவேண்டும் என்பதை  கற்றுத்தருகிறது என்றார். லச்சித் போர்புகானின் வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை எடுத்துரைத்த அவர், தேசத்திற்கு மேலாக எந்தவொரு நபரோ, உறவோ இல்லை என்றார். 
நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து  நமது தேசம் ஞானிகளாலும் துறவிகளாலும் வழிநடத்தப்படுகிறது என்றும் ஒரு தேசம் அதன் உண்மையான கடந்த காலத்தை காணும்போது மட்டுமே அதன் அனுபவங்களிலிருந்து எதிர்காலத்திற்கு சரியான திசையில் அது செல்லமுடியும் என்றும் பிரதமர் கூறினார். நமது வரலாற்று உணர்வு ஒரு சில  தசாப்தங்கள் மற்றும் சதாப்தங்களுக்குள் முடக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் பாரத ரத்னா, பூபென் அசாரிகாவை  மேற்கோள் காட்டிய பிரதமர், மீண்டும் மீண்டும் சிலவற்றை நினைவுப்படுத்துவதன் மூலமே அடுத்த தலைமுறைக்கு வரலாற்றின் உண்மையான சித்திரத்தை நாம் வழங்கமுடியும் என்றார்.
சத்ரபதி சிவாஜி மகராஜ் போன்று லச்சித் போர்புகான் வாழ்க்கையை மாபெரும் மேடை நாடகமாக உருவாக்கி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். இது ‘ஒரே பாரதம் - உன்னத பாரதம்’ என்ற தீர்மானத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.  வளர்ச்சியடைந்த இந்தியாவை, இந்தியாவின் வளர்ச்சி மையமாக வடகிழக்கு இந்தியாவை நாம் மாற்றவேண்டியுள்ளது என்று தெரிவித்த பிரதமர், லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாள் விழாவின் உணர்வு நமது தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் என்றும் இதன் மூலம் நாடு அதன் இலக்குகளை எட்டும் என்றும் தாம் நம்புவதாக கூறியதுடன் தமது உரையை நிறைவு செய்தார். 
அசாமுக்கு வருகை தந்த பிரதமர், விஞ்ஞான் பவனின் மேற்குப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஊரக அசாம் படங்களைப் பார்வையிட்டதோடு வரலாற்று கண்ணோட்டங்கள் குறித்த கண்காட்சியையும் சுற்றிப் பார்த்தார். முன்னதாக, லச்சித் போர்புகானின் உருவப்படத்தின் முன் பிரதமர், குத்துவிளக்கேற்றி  அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார். 
அசாம் ஆளுநர்  பேராசிரியர் ஜெகதீஷ் முக்கி, அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், திரு தபன் குமார் கோகோய் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
பின்னணி
அசாமின் அகோம் மன்னராட்சி, ராணுவத்தின் புகழ்மிக்க தளபதியாக விளங்கிய லச்சித் போர்புகான் (24. நவம்பர், 1622- 25 ஏப்ரல் 1672) முகலாயர்களை தோற்கடித்ததோடு ஔரங்கசீபின் எல்லை விரிவாக்க விருப்பங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். 1671-ல் சராய்காட் போரின் போது, அசாம் ராணுவ வீரர்களை உத்வேகப்படுத்திய லச்சித் போர்புகான், முகலாயர்களை தோற்கடித்தார்.h 
இவரின் 400-வது பிறந்தநாள் ஆண்டுவிழாவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குவஹாத்தியில்,  தொடங்கிவைத்தார். 
**************
(Release ID: 1878789) 
AP/SMB/KPG/KRS
                
                
                
                
                
                (Release ID: 1878874)
                Visitor Counter : 215
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam