தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் மணிப்பூரி திரைப்படத்துறையின் பொன்விழா கொண்டாட்டம்

53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில், “மணிப்பூரி திரைப்படத்துறையின் பொன் விழா” என்ற சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது. இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் மணிப்பூரி திரைப்படத்திற்கென பிரத்தியேக பிரிவு கொண்டுவரப்பட்டதன் வாயிலாக தங்களது நீண்ட கால கனவை நிறைவேற்றிய,  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்திற்கு மணிப்பூர் திரைப்பட மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் திரு சுன்சூ  பசஸ்பதிமயூம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மணிப்பூர் திரைப்பட மன்றத்தின் தலைவர் திரு சுர்ஜகந்தா சர்மா, இயக்குநர் திரு அசோக் வெல்லௌ மற்றும் தயாரிப்பாளர் அலெக்சாண்டர் எல். பௌ ஆகியோருடன் இணைந்து திரு பசஸ்பதிமயூம் செய்தியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கோவாவில் கலந்துரையாடினார்.

மணிப்பூரி திரைப்படத்துறையின் பொன்விழா கொண்டாட்டங்களாக இந்த வருட திரைப்பட திருவிழாவில் கதை சார்ந்த மற்றும் கதை சாரா பிரிவுகளில் தலா 5 படங்கள் வீதம் 10 திரைப்படங்கள் அடங்கிய தொகுப்பு திரையிடப்பட உள்ளது. முதல் நாளன்று ரத்தன் தியம்: தி மேன் ஆஃப் தியேட்டர் (Ratan Thiyam: The Man of Theatre) என்ற கதை சாரா திரைப்படமும், இஷனௌ (Ishanau) என்ற கதை சார்ந்த திரைப்படமும் திரையிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1878760

(Release ID: 1878760)

AP/RB/KRS

**************
 

iffi reel

(Release ID: 1878781) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi