தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

‘த்ரீ ஆப் அஸ்’, கொங்கன் பகுதியில் நடக்கும் உறவுகள் குறித்த நாடக பாணியிலான திரைப்படம்: இயக்குனர் அவினாஷ் அருண்

‘த்ரீ ஆப் அஸ்’, மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் பகுதியில் நடக்கும் உறவுகள் குறித்த நாடக பாணியிலான திரைப்படம்.  இயக்குனர் அவினாஷ் அருண் இயக்கிய இத்திரைப்படத்தில் ஷெபாலி ஷா, ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் நடிகர்-பாடலாசிரியர் ஸ்வானந்த் கிர்கிரே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் அவினாஷ் அருண் பேசுகையில், “எனது குழந்தைப் பருவத்தில் 3-4 வருடங்களை கொங்கன் பகுதியில் கழித்தேன், அங்குதான் இயற்கையுடன் எனது முதல் தொடர்பு ஏற்பட்டது. எனது திரைப்படங்கள் மூலம் எனக்குள் இருக்கும் குழந்தையைக் கண்டறிய நான் எப்போதும் முயற்சிக்கிறேன்." “கில்லா எனும் மராத்தி படத்தை இயக்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார்.

கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்யதிருந்த 'டேபிள் டாக்ஸ்' அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது, ஜெய்தீப் அஹ்லாவத் "படத்தில் சித்தரிக்கப்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நானும் அவினாஷும் திரைப்படப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம், படால் லோக்கில் ஒன்றாக வேலை செய்தோம், எனவே நாங்கள் வேலை செய்யும் பாணியை ஒருவருக்கொருவர் அறிந்திருந்தோம். படத்தைப் பொறுத்த வரையில், திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்பதால், எல்லாவற்றையும் என்னால் இங்கே சொல்ல முடியாது”, என்றார்.

ஜல்சா, ஹ்யூமன், டார்லிங்ஸ் அல்லது டெல்லி க்ரைம் 2 ஆகிய படங்களில் தனது அடுத்தடுத்த அற்புதமான நடிப்பின் மூலம் ஆண்டு முழுவதும் திரைப்படப் பிரியர்களை கவர்ந்து வரும் ஷெஃபாலி ஷா, இந்தத் திரைப்படம் திருமணத்தைப் பற்றியது மற்றும் வாழ்க்கையைப் பற்றியது என்று கூறினார். “முதலில் இத்திரைப்படத்தின் ஒருவரி கதைமட்டுமே எனக்கு சொல்லப்பட்டது. வலிமையான பெண் போன்ற கதாப்பாத்திரங்களில் இருந்து ஒரு மாற்றத்திற்காக, நான் பலவீனமான பெண்ணாக நடித்துள்ளேன். அதுதான் கதாபாத்திரத்தின் அழகு. ஆனால் வலுவாக இருப்பதால் நான் பாதிக்கப்படக்கூடியவள் அல்ல என்று அர்த்தமில்லை. இரண்டுமே அழகுதான். இரண்டில் ஒன்றை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? வலிமையும் பாதிக்கப்படக்கூடியவையும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘இந்தியன் பனோரமா 2022’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ஒரு படமாக இப்படம் இடம்பெற்றுள்ளது.

**************

PKV / SRI / DL

iffi reel

(Release ID: 1878697) Visitor Counter : 144


Read this release in: English , Marathi , Urdu , Hindi