தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஓடிடி தளங்களும், பாரம்பரிய திரையரங்குகளும் தொடர்ந்து இயங்கும்; இயக்குநர் மகேஷ் நாராயணன்
Posted On:
24 NOV 2022 8:43PM by PIB Chennai
ஓடிடி தளங்களும் பாரம்பரிய சினிமா தியேட்டர்களும் தொடர்ந்து செயல்படும் என 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் அறியிப்பு படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் தெரிவித்தார். திரைப்பட விழாவையொட்டி பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் பேசினார்.
முன்பு ஒரு காலத்தில் தனிப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்களின் படங்களை ஒளிபரப்ப தூர்தர்ஷனைத் தவிர வேறு வழியில்லாத நிலை இருந்தது என்று மகேஷ் நாராயணன், கூறினார். ஆனால் இப்போது அவர்களுக்கு பல வழிகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
திரைப்பட விழாவின் அழகு, கூட்டாகப் பார்ப்பது என்று கூறிய அவர், “டிஜிட்டல் ஊடகங்களுக்காக படம் எடுப்பது எனக்கு மிகவும் கடினம். திரையரங்குகளில், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் ஒரு திரையின் முன் உட்கார வைக்கப்படுகிறார்கள். ஆனால் டிஜிட்டல் ஊடங்கங்களில், மக்கள் தாங்கள் பார்ப்பதை தவிர்க்க, முன்னோக்கி, முன்னாடி அல்லது மாற்றுவதற்கு பல விருப்பங்கள் உள்ளன. ஓடிடி தளங்களில் திரைப்படங்களை தயாரிப்பது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சவாலானது” என்றார்.
அறியிப்பு படத்தைப் பற்றி கூறிய மகேஷ் நாராயணன், இது தொழிலாளர் வர்க்கம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றிய புலம்பெயர்ந்தோரின் கதை என்றார். இந்தத் திரைப்படம் நமது காலத்தின்-நவீன தொழில்நுட்பத்தின் சமூகப் பொருத்தமான விஷயத்தைக் கையாள்கிறது. ஆண்-பெண் உறவின் சிக்கலான கருப்பொருளில் இது ஒரு சக்திவாய்ந்த படம்.
இத்திரைப்படம் தில்லியில் கோவிட் தொற்றுநோயின் இரண்டாம் கட்டத்தின் போது வரையறுக்கப்பட்ட குழுவினருடன் பல சிரமங்களை எதிர்கொண்டு படமாக்கப்பட்டது. படத்தின் இந்திய இயல்பு பற்றி மகேஷ் நாராயணன் விளக்கினார். கதைக்களம் கேரளாவிலிருந்து புலம்பெயர்ந்த தம்பதியினரைப் பின்தொடர்கிறது என்றாலும், கதாபாத்திரங்கள் மலையாளம், இந்தி மற்றும் தமிழ் போன்ற பல மொழிகளைப் பேசுகின்றன.
படத்தின் தயாரிப்பாளர் ஷெபின் பேக்கர், நடிகை திவ்யபிரபா பி.ஜி மற்றும் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் ஆகியோர் உரையாடலில் பங்கேற்றனர்.
சுருக்கம்
தில்லிக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவ கையுறை தொழிற்சாலையில் வேலை செய்யும் கேரளாவில் இருந்து குடியேறிய தம்பதிகளான ஹரீஷ் மற்றும் ரேஷ்மியின் கதையை அறியிப்பு சொல்கிறது. அவர்கள் நல்ல வாழ்க்கைக்காக வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார்கள். கோவிட் தொற்றுநோய் முடக்கத்தின் போது, தொழிலாளர்கள் மத்தியில் ஒரு கையாளப்பட்ட வீடியோ மீண்டும் வெளிப்படும் போது, அது தம்பதியரின் வேலைகள் மற்றும் திருமணத்துக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றி
மகேஷ் நாராயணன் கேரளாவைச் சேர்ந்த திரைப்படத் தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். லோகார்னோ, மாஸ்கோ, ரோட்டர்டாம், கோவா மற்றும் ஷாங்காய் திரைப்பட விழாக்களில் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவர், ஷெபின் பேக்கர், டேக் ஆஃப், சார்லி, அறியிப்பு போன்ற மலையாளத்தில் டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் விருது பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
**************
SRI/ PKV / DL
(Release ID: 1878683)
Visitor Counter : 175