தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

பருவநிலை பற்றிய சரியான உரையாடலைத் தர முயற்சிக்கிறது


‘ஹவ் டு புளோ அப் ஏ பைப்லைன்’ திரைப்படம்

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க மாய மந்திரம் அல்லது உடனடி தீர்வு எதுவும் இல்லை. சரியான விதத்திலான உரையாடல்கள் மற்றும் தலையீடுகள் மட்டுமே முக்கியம். 'ஹவ் டு பிளோ அப் எ பைப்லைன்' மூலம், இந்த மிக முக்கியமான  பிரச்சினையில் சரியான உரையாடலைக் கொண்டுவர  முயற்சிக்கிறோம் என்று படத்தின் இயக்குனர் டேனியல் கோல்ட்ஹேபர் கூறியுள்ளார்.

கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள  ‘டேபிள் டாக்’ அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடிய டேனியல் கோல்ட்ஹேபர், இந்தப் படம் சுற்றுச்சூழல் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஆராயவோ விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறினார். "சுற்றுச்சூழல் தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கு சிலர் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். இது போன்ற தீவிர செயல்களின் விளைவுகள் குறித்து வெளிப்படையாக இருக்க இது முயற்சிக்கிறது,” என்று அவர் கூறினார். இந்த திரைப்பட விழாவில் இப்படத்தின் பிரீமியர் காட்சி வெளியிடப்பட்டது.

இதுவரை ஆராயப்படாத பெருங்கடல் போன்ற பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான உத்திகள் பற்றிய உரையாடல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று கூறும்  டேனியல், "இத்தகைய உரையாடல்கள் பெரும்பாலும் பெருநிறுவனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் லாபம் பெறும் நாடுகளால் வழிநடத்தப்படுகின்றன" என்று கூறினார்.

இந்த திரைப்படம் ஆண்ட்ரியாஸ் மால்மின் என்பவரின் நூலின்  தழுவலாகும். திரைப்பட விழாவில்  தனது திரைப்படம் திரையிடப்பட்டது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட டேனியல், இந்தப் படம் ஒரு அமெரிக்கத் திரைப்படம். இது முழுக்க முழுக்க ஐரோப்பிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட அமெரிக்கக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில் பிரச்சினை உலகளாவியது என்றார்.

படம் பற்றி

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குழுவினர் சரியான நேரத்தில் எண்ணெய்க் குழாயை நாசப்படுத்துவதற்கான ஒரு துணிச்சலான பணியைச் செய்கிறார்கள், இது பருவநிலை நெருக்கடியின் தீவிரமான ஆய்வு ஆகும்.

டேனியல் கோல்ட்ஹேபர் ஒரு இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆவார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், அங்கு அவர் விஷுவல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் படித்தார். டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஹவ் டு பிளோ அப் எ பைப்லைன்’ திரையிடப்பட்டது.

**************

SRI/ PKV / DL

iffi reel

(Release ID: 1878674) Visitor Counter : 158


Read this release in: English , Marathi , Urdu , Hindi