தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தி சினிமாவில் பாலின பங்கேற்பு குறித்த மாஸ்டர் வகுப்பு
கோவாவின் பனாஜியில் நடந்து வரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸுடன் (டிஸ்) இணைந்து இந்தி சினிமாவில் பாலின பங்கேற்பு குறித்த மாஸ்டர் வகுப்பு நடத்தப்பட்டது. “திரைப்படத்தின் உச்சவரம்பை உடைப்போம்: ஹிந்தி சினிமாவில் பாலினம் மற்றும் வேலை” என்ற தலைப்பில் விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.
ஹிந்தி சினிமாவில் திரையில் மற்றும் திரைக்கு பின்னல் இருக்கும் துறைகளில் பாலினம் மற்றும் வேலை பற்றிய ஆய்வின் முடிவுகள் இந்த மாஸ்டர் வகுப்பில் விவாதிக்கப்பட்டது. 35 படங்களில் இருந்து மொத்தம் 1930 கதாபாத்திரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. பெண் குழு உறுப்பினர்களுக்கான திரைப்படத் தயாரிப்பில் மிகவும் பிரபலமான துறைகள், அவர்கள் பணிபுரியும் நிலைகள் மற்றும் திரைப்பட விருதுகளை வென்ற பெண்களின் பங்கு ஆகியவற்றையும் இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.
‘டிஸ்’ ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் லட்சுமி லிங்கம், பேராசிரியர் ஷில்பா பாட்கே மற்றும் திருமதி ரஷ்மி லம்பா, தேசிய விருது பெற்ற திரைப்பட விமர்சகர் திருமதி மீனாட்சி ஷெட்டே மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் திரு. பூஷன் கிருபலானி ஆகியோர் அடங்கிய குழு இந்த தலைப்பை குறித்த தங்களின் விவாதங்களை எடுத்துவைத்தது. 'இந்தி சினிமாவில் பாலினப் பங்கேற்பு' என்ற தலைப்பில் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஊடகம் மற்றும் கலாச்சார ஆய்வுகளுக்கான பிரிவின் தலைவியர் பேராசிரியர் லக்ஷ்மி லிங்கம், “பெண்கள் பெரும்பாலும் திரைப்பட தயாரிப்பிற்குப்பின் பணி கட்டங்களில் உள்ளனர், அதே சமயம் ஆக்கப்பூர்வமான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவர்களின் பங்கு குறைவாக உள்ளது” . கடந்த 75 ஆண்டுகளில் தேசம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 4 பெண் அமைச்சர்களையும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) கடந்த 72 ஆண்டுகளில் 4 பெண் தலைவர்களையும், கடந்த 13 ஆண்டுகள் 29% பெண் உறுப்பினர்களையும் மட்டுமே பெற்றுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
கோல்ட் ஃபிஷ் திரைப்படத்தின் இயக்குனர் திரு. புஷன் கிரிபலானி, தனது படப்பிடிப்பு தளத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், படப்படிப்பின் போது பெண்கள் இருப்பது ஆண்களின் நடத்தையை எப்படி நேர்மறையாக மாற்றுகிறது என்பது குறித்தும் பேசினார்.
தொழில்துறையில் உள்ள பெண் வெறுப்பு பற்றி பேசுகையில், திரு. கிருபலானி, "நான் ஒளிப்பதிவாளராக நுழைந்த ஒவ்வொரு திரைப்பட அணியிலும் பெண் வெறுப்பு நிறைந்திருந்தது. நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. அதனால்தான் நான் சுயாதீனத் திரைப்படத்தை தேர்ந்தெடுத்தேன்" என்று குறிப்பிட்டார்.
‘வை லாய்டர்(Why Loiter)’ என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரும், ‘அண்டர் தி ஓபன் ஸ்கை (Under the Open Sky’)’ என்ற ஆவணப்படத்தின் இணை இயக்குநருமான பேராசிரியர் ஷில்பா பாட்கே, கல்வியறிவு விகிதம் அதிகமாகியிருந்தாலும், தொழில்களில் பெண்களின் பங்கேற்பு குறைந்து வருவதை சுட்டிக்காட்டினார்.
திருமிகு ராஷ்மி லம்பா, திரைப்படங்களில் பெண்களை முன்மாதிரியாக வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். சிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருது பெற்ற திருமிகு மீனாட்சி ஷெட்டே கேரளாவில் நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்சனை குறித்து பேசினார். கேரள திரையுலகில் உள்ள பெண்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த ஒரு படத்தில்லும் வாய்ப்பு வழங்காமல் அவரை தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
**************
PKV / SRI/ DL
(Release ID: 1878671)
Visitor Counter : 195