தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அறியப்படாத மணிப்பூர் குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஐஎப்எப்ஐ வழங்குகிறது
53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ள மணிப்பூர் மாநில அரங்கில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களை படப்பிடிப்பிற்காக அம்மாநிலத்திற்கு ஈர்க்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு திரைப்பட விழா மணிப்பூரி சினிமாவின் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, முதல் மணிப்பூரி திரைப்படம், மாதங்கி வெளியிடப்பட்டது. இதை டெப்குமார் போஸ் இயக்கியிருந்தார். ஐந்து தசாப்தங்களாக மணிப்பூரி சினிமாவின் பயணம் வியக்கத்தக்கதாக வளர்ந்துள்ளது.
திரைப்பட விழாவில் முதன்முறையாக, மாநிலங்களில் திரைப்படத் துறையை ஊக்குவிக்க, பல மாநில அரசுகள் ஃபிலிம் பஜாரில் தங்கள் அரங்குகளை நிறுவியுள்ளன. பீகார், மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், தில்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் தங்கள் அரங்குகளை நிறுவியுள்ளன.
மணிப்பூர் அரங்கின் கருப்பொருள் ‘அறியப்படாத மணிப்பூர் ’. இது முக்கியமாக மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மணிப்பூரின் வரலாறு, தொல்பொருள், கலாச்சாரம், இயற்கை பாரம்பரியத்தை ஆராய வளரும் திரைப்பட தயாரிப்பாளர்களை இது அழைக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்ப்பதும், மாநிலத்தை சிறந்த திரைப்படம் தயாரிக்கும் இடமாக வளர்ப்பதுமே இதன் நோக்கமாகும்.
லோக்டக் ஏரி, உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா போன்ற இயற்கை அழகை இந்த அரங்கு காட்சிப்படுத்துகிறது. உலகிலேயே முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் ஒரே சந்தையான இமா மார்க்கெட் போன்ற கலாச்சார அதிசயங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத்தின் செயலாளரான சுன்சு பச்சஸ்பதிமயும், மணிப்பூரி கலாச்சாரம் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதை விளக்கினார்.
**************
SRI/ PKV /DL
(रिलीज़ आईडी: 1878649)
आगंतुक पटल : 172