தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பீகாரை அறிந்துக்கொள்வோம்
வளர்ந்து வரும் திரைப்பட தயாரிப்பாளர்கள், புத்தர் மற்றும் மகாவீரர் பிறந்த பூமியின் வரலாறு, தொல்பொருள், கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை அறிந்துக்கொள்ள 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பீகார் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் திரைப்படத் தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்க ‘ஃபிலிம் பஜாரில்’ தங்களுடைய அரங்கினை நிறுவியுள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் பீகார் அரங்கினை திறப்பு விழாவின் போது பார்வையிட்டனர்.
முன்னதாக, பீகார் அரங்கினைத் திறந்து வைத்த புகழ்பெற்ற நடிகர் திரு. பங்கஜ் திரிபாதி, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தனது சொந்த மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரங்கினை கண்டு மகிழ்ச்சியடைந்தார். திரைப்படம் உருவாக்க திறன் அதிகம் கொண்ட மாநிலமாக பீகார் உள்ளது, அதைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பீகார் அரசு அதிகாரி திருமதி. பந்தனா பிரேயாஷி கூறுகையில், பீகாரில் படப்பிடிப்புக்கு திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்க்க மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் விரைவான இணைப்பு மற்றும் வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் பேசினார்.
ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை கண்காட்சியான சோனேபூர் கால்நடை கண்காட்சி மற்றும் சீக்கிய சமூகத்தின் புனித யாத்திரைகளில் ஒன்றான ஹர்மந்திர் தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப் போன்ற கலாச்சார, இயற்கை மற்றும் தொல்பொருள் அதிசயங்களை இந்த அரங்கு எடுத்துக்காட்டுகிறது.
பீகாரில் திரைப்படத் தயாரிப்பின் பாரம்பரியத்தையும் இந்த அரங்கு எடுத்துக்காட்டுகிறது. ரிச்சர்ட் அட்டன்பரோவின் இயக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் பல நூற்றாண்டுகள் பழமையான பாட்னா ஆட்சியர் அலுவலகத்தில் படமாக்கப்பட்டன.
**************
PKV / SRI/ DL
(Release ID: 1878647)
Visitor Counter : 139