சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பருவநிலை மாநாடு குறித்து ஐநா குழுவுடனான சிறப்பு கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ் உரையாடினார்
Posted On:
24 NOV 2022 4:03PM by PIB Chennai
பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மையப்பொருள் மற்றும் முடிவுகள் தொடர்பாக ஐநா குழுவுடனான சிறப்பு கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ் இன்று ஐநா அலுவலகத்தில் உரையாடினார். அதைத்தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தூதரகத்துடன் இணைந்து, பருவநிலை மாற்ற படக்கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் திரு.ஷோம்பி ஷார்ப், அண்மையில் எகிப்தில் நிறைவடைந்த பருவநிலை மாநாட்டில் இந்தியா முக்கியப் பங்கு வகித்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். பருவநிலை தொடர்பான பணிகளில் இந்தியாவின் துணிச்சலான தலைமைத்துவம் மூலம் இந்திய அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் புதிய தீர்வுகள் ஏற்படுவதாக கூறினார். இதன் மூலம் நீடித்த மற்றும் சமமான உலகளாவிய எதிர்காலத்திற்கான கலங்கரை விளக்கமாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு.பூபேந்திர யாதவ், பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை இந்தியாவில் செயல்படுத்துவது குறித்து உங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொண்டார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதை ஊக்குவிப்பதற்கான இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையை – (லைஃப்) பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், பகிர்ந்து கொண்டார் என்று கூறினார். இதையடுத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு.பூபேந்திர யாதவ் குறிப்பிட்டார்.
**************
SM/IR/KG/KRS
(Release ID: 1878582)
Visitor Counter : 172