தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆணாதிக்கம் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது என்பது பற்றி விவரிக்கும் லிட்டில் விங்ஸ் குறும்படம்
ஒரு கவிதையை நீங்கள் படிக்கும் போது
சொல் புதிதாக
பொருள் புதிதாக
சுவை மிக்க நவ கவிதையாக இருக்க வேண்டும்
தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதி பாடிய புகழ் மிக்க வரிகளை லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் குறும் படத்தின் இயக்குனர் நவீன்குமார் முத்தையா தனது திரைப்படம் பற்றி பேசும் போது எடுத்துக்காட்டினார். “நீங்கள் ஒரு கதையை சொல்ல விரும்பும்போது அல்லது ஒரு கொள்கையை முன்வைக்கும் போது ஆயிரம் தடவை சொல்லப்பட்டதாக இருப்பினும் அதனை தனித்துவமான முறையில் சொல்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்” என்று கோவாவில் நடைபெறும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஊடக கலந்துரையாடல் நிகழ்வில் அவர் தெரிவித்தார்.
“சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்க கொடுமையை எனது படம் எடுத்துரைக்கிறது. இதனை மாறுபட்ட கோணத்தில் நான் சொல்ல விரும்பினேன்” என்று நவீன்குமார் கூறினார். தனது படம் ஆணின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் ஆணாதிக்கத்தின் கொடுமையை ஒவ்வொரு பெண்ணும் அமைதியாக ஆனால் தீவிரமாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இத்தகைய படத்திற்கு துண்டுதலாக இருந்தது எது என்பது பற்றி விவரித்த இயக்குனர்,தமிழ் எழுத்தாளர் கந்தர்வன் எழுதிய திருமணமான ஒரு ஜோடி பற்றிய சிறுகதையை ஏழு ஆண்டுகளுக்கு முன் படித்ததாக கூறினார். இந்த கதையை மறந்துவிட்டபோதும் இதன் சம்பவங்கள் மற்றும் கருத்துக்கள் தமது வாழ்க்கையிலும் சுற்றுப் புறங்களிலும் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் வந்தன. இதுதான் இந்த கருத்தில் படம் எடுக்க துண்டியது என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது திரைப்படத்தின் கதாநாயக நடிகர் சீ. காளிதாஸ், கதாநாயகி மணிமேகலை, ஒளிப்பதிவாளர் சரவண மருது ஆகியோரும் உடனிருந்தனர். லிட்டில் விங்ஸ் என்ற இந்த திரைப்படம் இந்திய பனோராமாவில் கதை அல்லாத திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்பட்டது.
நவீன்குமார் முத்தையா சுயமாக முயற்சி செய்து முன்னேறும் திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர். லிட்டில் விங்ஸ் படம் காம்ரேட் டாக்கீஸ் மூலம் திலானி ரவீந்திரன், ராஜுமுருகன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
•••••••
Sri/SMB/RJ/RR
(Release ID: 1878517)
Visitor Counter : 359