சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பனாமாவில் நடைபெறும் சிஓபி 19-ல் ஆமைகள் மற்றும் கடலாமைகள் பாதுகாப்பில் இந்தியாவின் முயற்சிகள் பாராட்டப்பட்டன
प्रविष्टि तिथि:
24 NOV 2022 10:43AM by PIB Chennai
அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த மாநாட்டிற்காக சிஓபி-19-ன் கூட்டம் பனாமா நகரில் நவம்பர் 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் நன்னீர் ஆமையான பட்டாகரை பட்டியலில் சேர்க்கும் இந்தியாவின் யோசனைக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. இதனை அறிமுகம் செய்தபோது பல்வேறு நாடுகள் பாராட்டியதோடு ஏற்பும் தெரிவித்தன.
ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகள் பாதுகாப்பில் இந்தியாவின் பணிகளுக்கும் ஆமைகளின் சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பதற்கான முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் டர்ட்ஷீல்டு என்பதன் விளைவுகள் மெச்சத்தக்கவையாக இருந்தன என்று இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இந்த முகமையால் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகளை வேட்டையாடுதல், சட்டவிரோத வர்த்தகம் ஆகியவை கணிசமாக குறைந்துள்ளன என்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆமைகள் மற்றும் கடலாமைகள் பாதுகாப்பில் இந்தியாவின் உறுதிப்பாடு இந்தக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டதோடு, இவற்றை பாதுகாக்க உயர் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1972-ஆம் ஆண்டின் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், கூறப்பட்டது.
நவம்பர் 25 அன்று நிறைவடையும் இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு வனத்துறையின் தலைமை இயக்குநர் மற்றும் சிறப்புச் செயலாளர் தலைமையேற்று சென்றுள்ளார்.
---
SRI/SMB/KPG/KRS
(रिलीज़ आईडी: 1878511)
आगंतुक पटल : 258