தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
லாஸ்ட் திரைப்படம் படப்பிடிப்பு அரங்கத்தை அடிப்படையாக கொண்ட படமல்ல, இது நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை: யாமி கௌதம்
கோவாவில் நடைபெறும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு இடையே பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்கீஸ்’ கருத்தரங்கில் லாஸ்ட் திரைப்பட நடிகை யாமி கௌதம் பேசினார். லாஸ்ட் திரைப்படம் படப்பிடிப்பு அரங்கத்தை அடிப்படையாக கொண்ட படமல்ல, இது நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை என்று அவர் கூறினார். இப்படத்தை காணும்போது நீங்கள் கதையோடு ஒன்றிணைந்து உலகில் நம்மை சுற்றியுள்ளவர்கள் மற்றும் நம்முடைய சொந்த அனுபவங்கள் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் இடம்பெற்றுள்ளதை உணர்வீர்கள் என்று தெரிவித்தார்.
தி்ரைப்படத்தில் தமது கதாபாத்திர அனுபவம் குறித்து விளக்கிய யாமி, இதுபோன்ற கதாபாத்திரம் உங்களை வந்தடையும்போது, அதில் நடிப்பது மிகவும் சவாலானது என்று கூறினார். சிலநேரங்களில் குறைவானவற்றையே நாம் நிறைவாக உணர்வது போல் அதை நான் உத்தரவாக பின்பற்றினேன் என்று தெரிவித்தார். கதாபாத்திரத்தில் நடிப்பது போல் இல்லாமல் கதாபாத்திரமாகவே நான் மாறி நடித்தேன் என்று கூறினார்.
இப்படத்தில் யாமியின் கதாபாத்திரம் குறித்து பேசிய இயக்குநர் அனிருத்தா ராய், இதுபோன்ற கதாபாத்திரத்தில் நிறைய உரையாடல்களையும், நடிப்புகளையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் நிஜமான யாமியை கண்டறிய அவசியம் இத்திரைப்படத்தை காண வேண்டும் என்று அவர. குறிப்பிட்டார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இன்று திரையிடப்பட்டு, பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878393
**********
SM/IR/KG/KRS
(Release ID: 1878393)
(Release ID: 1878508)
Visitor Counter : 177