தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நெருங்கியவர்களின் பரிந்துரையால் உங்களுக்கு முதல் படம் கிடைக்கும், ஆனால் உங்களுக்காக பேசுவது உங்களின் திறன் மட்டுமே: இயக்குனர் லவ் ரஞ்சன்


திரைப்படங்கள் மிகவும் சக்திவாய்ந்த ஊடகம்: இயக்குனர் கபீர் கான்

புதியவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களை அணுக விரைவில் ஒரு மொபைல் செயலி அறிமுகம்: தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின்

நெருங்கியவர்களின் பரிந்துரையால் வந்தவர் என்ற வட்டத்தை உடைக்க எனக்கு நான்கு வருடங்கள் எடுத்தது: பாடகி அனன்யா பிர்லா

பெரிய திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒரு காலத்தில் புதியவர்கள்: இயக்குனர் ஆனந்த் எல்.ராய்

Posted On: 23 NOV 2022 9:27PM by PIB Chennai

“நெருங்கியவர்களின்  உறவு (நேப்போடிசம்) என்பது உறவுகளின் பந்தம் என்று நான் உணர்கிறேன். ஆனால் தற்போது சினிமா துறையில் இது ஒரு கசப்பான விஷயமாக மாறிவருகிறது. உங்கள் பெற்றோர் திரைத்துறையில் இருந்து வந்தாலும், அவர்களது பரிந்துரை உங்களது முதல் படம் அல்லது இரண்டாவது படத்திற்கு உதவலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்காக பேசுவது உங்களின் திறமை மட்டுமே. திரைத்துறையில் நுழையும் நிறைய புதியவர்களுக்கு ‘தான் பாதிக்கப்பட்டவன்’ (victim syndrome) என்ற மனநோய் உள்ளது.” என்று இயக்குனர் லவ் ரஞ்சன் கூறினார். 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘பொழுதுபோக்குத் துறையில் மாறிவரும் சூழல் மற்றும் இந்தத் தொழிலில் எப்படி நுழைவது’ என்ற தலைப்பில்  நடந்த ‘உரையாடல்’ அமர்வில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

இயக்குநர் கபீர் கான், ஆவணப்படத் தயாரிப்பாளராக இருந்த நாட்களில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார். அந்த நிகழ்வுதான் தனது முதல் படமான ‘காபூல் எக்ஸ்பிரஸ்’ படத்தின் தொடக்கக்  காட்சியாக அமைந்தது என்று கூறினார். ” பாலிவுட் என் உயிரைக் காப்பாற்றியது, அப்போதுதான் படங்களை விட சக்திவாய்ந்த ஊடகம் இல்லை என்று நான் முடிவு செய்தேன். என் கதைகளைச் சொல்ல நான் அங்கு இருக்க வேண்டும். உங்கள் குரலில் தனித்துவம் இருக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் அடிக்கடி சொல்வேன். நான் என் மாணவர்களிடம் சொல்வது, நான் ஒரு படத்தைப் பார்க்கும்போது, இதை அவரால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணம் வர வேண்டும்”, என்று கூறினார்.

திரைப்பட தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் பல திரைப்பட தயாரிப்பாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளார். அவர்களின் தீர்மானம் புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிப்பதாகும். புதுமுகங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்களைச் சந்தித்தபோது தனக்கு இந்த யோசனை வந்ததாக அவர் கூறினார். மேலும், "புதிய இயக்குனர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களை அணுக ஒரு செயலியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஒரு பாடகி மற்றும் நடிகராக தனது பயணம் குறித்து கேட்கப்பட்டதற்கு அனன்யா பிர்லா, " தலைமுறை தலைமுறையாக திரைத்துறையில் உள்ள ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். பழமைவாத குடும்பத்திலிருந்து வந்த நான் ஒரு நடிகையாக ஆவது பெரிய களங்கமாக கருதப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆரம்பத்தில், நான் பாடகியாவதற்கு  எனது தந்தை பணம் கொடுத்ததாக மக்கள் நினைத்ததால், நான் நிறைய வெறுப்புகளை பெற்றேன். என்னை நிரூபிக்கவும், நான் யார் என்பதற்காக நேசிக்கப்படவும் எனக்கு நான்கு ஆண்டுகள் ஆயின ”என்று அவர் கூறினார்.

புதுமுக இயக்குனர்களை  வைத்து திரைப்படம் எடுப்பதில் உள்ள சவால்கள் குறித்து கேட்டதற்கு, “இங்கிருக்கும் பெரிய திரைப்பட இயக்குனர்கள் அனைவரும் ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். இந்தத் தொழில் எப்போதும் புதியவர்களை வரவேற்கிறது என்று நான் நினைக்கிறேன். மல்டிபிளக்ஸ்களின் வருகையால் தயாரிப்பாளர்களுக்கும் புதுமுக இயக்குனர்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.

**************

SMB / SRI/ DL



(Release ID: 1878402) Visitor Counter : 269


Read this release in: English , Urdu , Marathi , Hindi