தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மகிழ்ச்சியின் உறைவிட பூமியிலிருந்து வந்திருக்கும் கனவுகள்
கோஸ்டாரிகா உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. கோஸ்டாரிக்கர்கள் எளிய விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள் மற்றும் அந்த நொடியை ரசிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, பொழுதுபோக்கின் மையமான கனவுகளின் உலகத்தின் மீதான அவர்களின் ஈடுபாடு இயற்கையானதே. கோஸ்டாரிகாவின் வண்ணமயமான திரைப்படங்களின் வரிசை ஒவ்வொரு ஆண்டும் துடிப்புடன் வளர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு, இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பு, கோஸ்டாரிகாவிலிருந்து இரண்டு படங்களை நம்மிடம் கொண்டு சேர்த்துள்ளது. ‘விரும்பப்படும் தங்க மயில்’ விருதுக்காக வாலண்டினா மாரல் இயக்கிய 'ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் (2022)’ (I Have Electric Dreams) திரைப்படம் போட்டியிடுகிறது. இப்படம் தனது தாயுடன் வசிக்கும் 16 வயது சிறுமி ஈவாவின் வாழ்க்கையைச் சுற்றி அமைந்துள்ளது. டீனேஜ் பருவத்தின் போராட்டங்களையும், வெளி உலகின் இரக்கமற்ற தன்மையையும் இத்திரைப்படம் பிரதிபலிக்கிறது. ஈவாவிற்கும் அவரது தந்தைக்கும் இடையிலான காதல் - வெறுப்பு உறவை படம் சித்தரிக்கும் விதம் பார்வையாளர்களை வெவ்வேறு உணர்ச்சிகளின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது. இவை இத்திரைப்படத்திற்கு பாராட்டுகளை குவித்து வருகின்றன.
டோமிங்கோ அண்ட் தி மிஸ்ட்(2022) என்ற திரைப்படமும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதில் கதாநாயகன் டொமிங்கோ தனது வீடு அபகரிக்கப்படுவதற்கு எதிராக போராடுகிறார். டொமிங்கோவின் வீட்டில் ஒரு மர்மம் பொதிந்துள்ளது; அவரது மனைவியின் ஆவி அங்கு வருகிறது. தனது வீட்டை விட்டுக்கொடுக்க மாட்டான் என்ற டொமிங்கோவின் தீர்மானத்தை படம் காட்சிபடுத்துகிறது.
**************
SMB / SRI/ DL
(Release ID: 1878390)
Visitor Counter : 163